சுவாமி விவேகானந்தர் பார்வையில் கெளதம புத்தர்: - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Thursday 18 July 2019

சுவாமி விவேகானந்தர் பார்வையில் கெளதம புத்தர்:

சுவாமி விவேகானந்தர் பார்வையில் கெளதம புத்தர்
புத்தரின் தோற்றம் :-
மதத்தின் அடிப்படையில் அல்லது சாதியின் அடிப்படையிலும் பூசல்கள் வெடித்தன. நம் சமூகத்தின் வலிமை வாய்ந்த இரண்டு பிரிவினரான அரசர் மற்றும் புரோகிதர்களுக்கிடையே சண்டை தோன்றியது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் இத்தகைய போராட்டமும், குழப்பமும் இந்தியாவை மூழ்கடித்தது. அப்போது மகத்தான மனிதர் ஒருவர் தோன்றினார், அவர் தான் சாக்கிய முனிவரான கெளதம புத்தர். புத்தர் காலத்தில் ... கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று புரோகிதர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவரைத் தங்கள் மூலமாகத் தான் அணுக முடியும் என்று கூறுகிறார்கள்.
மலைப் பிரசங்கத்தையோ, கீதையையோ எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டும் மிக, மிக எளியவை. தெருவில் போகிறவன் கூட அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். உண்மை அங்கே தெளிவாக, எளிமையாக வெளிப்படுத்தப்பட்டிருகிறது. ஆனால் உண்மையை அவ்வளவு எளிதாக அறிய முடியும் என்பதைப் புரோகிதர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். எனவே இரண்டாயிரம் சொர்க்கங்களையும், இரண்டாயிரம் நரகங்களையும் பற்றிப் பேசுகிறார்கள். அவர்கள் சொன்னபடி கேட்டால் நீங்கள் சொர்க்கம் செல்வீர்கள். இல்லாவிட்டால் உங்களுக்கு நரகம் தான்.



புத்தர் காலத்தில் இந்தியா முழுவதிலும் இந்த பில்லி சூனியங்கள் மண்டிக் கிடந்தன. பாமர மக்களுக்கு அறிவுக்கான வழிகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. பாமரன் ஒருவனின் காதில் வேதங்களின் ஒரு வார்த்தை விழுந்தால் போதும், அவன் கடுமையாக தண்டிக்கப்படுவான். பண்டைய இந்துக்கள் கண்டுபிடித்த உண்மைகளைக் கொண்டிருந்த வேதங்களைப் புரோகிதர்கள் ஒரு ரகசியமாக்கிவிட்டனர்.



புத்தரின் கோட்பாடு :-



புத்தரால் அதைப் பொறுக்க முடியவில்லை. அவருக்கு அறிவு இருந்தது, ஆற்றல் இருந்தது, ஆகாயம் போன்று எல்லையற்ற விரிந்த இதயம் இருந்தது. பாமர மக்களைப் புரோகிதர்கள் எப்படியெல்லாம் நடத்துகிறார்கள், அவர்களின் அதிகாரம் எப்படியெல்லாம் வளர்ந்து கொண்டே போகின்றன என்பதைக் கண்டார். மக்களின் மனத் தளைகளையும், மதத் தளைகளையும் உடைக்க விரும்பினார். அவருடைய இதயம் விசாலமானது.


புத்தர் மனிதன் ஏன் துன்பப்படுகிறான் என்பதை அறிந்தார். அதிலிருந்து விடுபடுவதற்கான வழியும் கண்டார். அவர் ஒரு செயல் வீர்ர். எல்லாவற்றிற்கும் விடை கண்டுபிடித்தார். வேற்றுமையின்றி அவர் எல்லோருக்கும் போதித்தார். அறிவொளியின் அமைதியை அனைவரையும் உணரச் செய்தார்.



புத்தரின் கோட்பாடு இதுதான். நமது வாழ்க்கையில் ஏன் துயரம் இருக்கிறது? ஏனெனில் நாம் சுயநலமிகள். நமக்கென்று பொருட்களை விரும்புகிறோம். அதனால் தான் துயரம் இருக்கிறது. மீள என்ன வழி? நான் – உணர்வை விடுவது தான்.
பிறப்பு இறப்புகளின் சுழற்சியில் ஆன்மா என்ற ஒன்று இல்லவே இல்லை. எண்ணப் பேரலை இருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. உடம்பு எப்போதும் மாறிக் கொண்டேயிருக்கிறது. அதே போல் தான் மனமும், உள்ளுணர்வும்.
நான் என்று ஒன்று இல்லை என்னும் உண்மையை உணர்ந்து கொண்டால் நாமும் இன்பமாக இருப்போம், மற்றவர்களையும் இன்பத்தில் ஆழ்த்துவோம். புத்தர் பேசியதுடன் நின்று விடவில்லை. உலகத்திற்காகத் தம் உயிரையும் கொடுக்க தயாராக இருந்தார். (7.249 -55)


வேள்விகளைத் தடுப்பதற்காக , மிருகங்களின் உயிரைக் காப்பதற்காகத் தமது உயிரைக் கொடுக்கத் தயாராக இருந்தவர் அவர் ஒருவர் தான். ஓர் ஆட்டுக் குட்டியைப் பலியிடுவதனால் நீ சொர்க்கத்திற்குப் போவாய் என்றால், மனிதனைப் பலியிடுவது உனக்கு இன்னும் மேலான பதவியைக் கொடுக்கும். ஆகவே என்னைப் பலியிடு” என்று அவர் ஓர் அரசனிடம் சொன்னார். அரசன் திகைத்து விட்டான். (7.246)



இந்த மிருக பலி ஒரு மூட நம்பிக்கை; கடவுள், ஆன்மா இவைகள் இரண்டு பெரிய மூட நம்பிக்கைகள். கடவுள் என்பது புரோகிதர்கள் கண்டுபிடித்த மூட நம்பிக்கை. இந்தப் பிராமணர்கள் போதிப்பது போல் கடவுள் என்ற ஒருவர் இருந்தால் உலகில் இத்தனை துன்பங்கள் ஏன் உள்ளன? கடவுள் இருந்தால் அவரும் என்னைப் போல் காரண - காரிய நியதிக்கு அடிமையாகவே இருக்கிறார். அப்படி கட்டுப்படாவிட்டால் அவர் ஏன் படைக்கிறார்? இத்தகைய கடவுள் திருப்தி தருபவராக இல்லை.



உலகை ஆள்பவர் எங்கோ மேலுலகில் இருக்கிறாராம். அது அவரது இனிய சித்தமாம்.! இங்கு துன்பத்தில் நாம் அல்லவா சாகிறோம்! நம்மை ஒரு நொடி கவனிக்க கூட அவருக்கு நல்ல மனம் இல்லை. நம் வாழ்க்கையே ஒரு தொடர்ந்த துன்பம். ஆனால் இந்த தண்டனை போதாதாம். செத்த பிறகும் இன்னும் தண்டனைகள் உள்ள இடங்களுக்கு போக வேண்டுமாம்!.  இருந்தும் இத்தகைய கடவுளைத் திருப்தி செய்வதற்காக  நாம் எத்தனையோ கிரியைகளும், சடங்குகளும் செய்கிறோம்!.



இந்தச் சடங்குகள் எல்லாம் தவறு. உலகில் ஒரே ஒரு லட்சியம் தான் இருக்கிறது. எல்லா மனமயக்கங்களையும் அழியுங்கள். எது உண்மையோ அது எஞ்சும். மேகங்கள் விலகியதும் சூரியன் தோன்றுவான்” என்றார் புத்தர். எந்த மூட நம்பிக்கைக்காகவோ, எந்தக் கடவுளையும் திருப்தி செய்வதற்காகவோ, எந்த வெகுமதியையும் எதிர்பார்த்தோ வேலை செய்யாதீர்கள். உங்களுடைய நான் – உணர்வைக் கொன்று, உய்வு பெறுவதற்காகவே வேலை செய்யுங்கள். வழிபாடு பிரார்த்தனை எல்லாம் முட்டாள் தனம்.கடவுள் எங்கே இருக்கிறார் என உங்களுக்கு தெரியாது, ஆனாலும் கடவுளைப் பற்றிப் பைத்தியமாக இருக்கிறீர்கள்.



புத்தமதம் உலகில் பரவுதல் :-



புத்தரின் மதம் வேகமாகப் பரவியது. அதற்குக் காரணம் அந்த மாபெரும் அன்பு. மனிதகுல வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு விசாலமான இதயத்திலிருந்து அந்த அற்புத அன்பு,பொங்கி வழிந்து மனிதகுல சேவைக்காக மட்டும் அல்ல, எல்லா உயிரினங்களின் சேவைக்காவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.
மனிதன் கடவுளை நேசித்தான், ஆனால் தன் சகோதர மனிதனை முற்றிலும் மறந்தான். கடவுளுக்காக தன் உயிரைக் கொடுக்கக் கூடிய அதே மனிதன், திரும்பி அதே கடவுளுக்காக தன் சகோதர மனிதனைக் கொல்லவும் முடியும், உலகின் நிலைமை அப்படித் தான் இருந்தது.
கடவுளின் மகிமைக்காக மகனைக் கொல்வார்கள், நாடுகளைக் கொள்ளையடிப்பார்கள், கடவுளின் மகிமைக்காக ஆயிரக்கணக்கானோரைக் கொல்வார்கள், கடவுளின் மகிமைக்காகப் பூமியை இரத்த வெள்ளத்தால் நனைப்பார்கள்.


இப்போது தான் முதல் தடவையாக , அவர்கள் இன்னொரு கடவுளான மனிதனைப் பார்த்தார்கள். மனிதன் தான் நேசிக்கப்பட வேண்டியவன். எல்லா மனிதர்களிடமும் ஆழ்ந்த அன்பைப் பொழிந்த அந்த அலை, இந்தியாவிலிருந்து கிளம்பி, வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று எல்லா திசையிலுள்ல நாடுகளையும் படிப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக நனைத்தது. (7.255 – 7)



விவேகானந்தர் புத்தரை நேசிக்கும் காரணிகள் :-



என் வாழ்க்கை முழுவதும் நான் புத்தரை நேசிக்கிறேன்.... வேறு யாரையும் விட அவரது குணநலனை, அந்த துணிச்சலை, அந்த பயமற்ற தன்மையை, அந்த அபார அன்பை நான் மதிக்கிறேன்.  அவர் உண்மையைத் தேடியது கூட மக்களின் துயரங்களைத் துடைப்பதற்காக. மக்களுக்கு எப்படி உதவுவது, அது ஒன்று தான் அவரது கவலை. வாழ்க்கை முழுவதும் தமக்காக ஒருமுறை கூட எதையும் நினைக்கவில்லை.....



வாழ்க்கையில் உயர்ந்தவராக இருந்தது போல் மரணத்திலும் அவர் உன்னதமானவராகவே இருந்தார். செவ்விந்தியரைப் போல் இருந்த இனத்தைச் சேர்ந்த ஒருவர், கொடுத்த உணவை அவர் சாப்பிட்டார். அந்த இனத்தினர் கண்டதையெல்லாம் உண்பதால், இந்துக்கள் அந்த இனத்தினரைத் தொடுவதில்லை. ஆனால் புத்தபிரான் அவன் கொடுத்த உணவையும் மகிழ்ச்சியுடன் உண்டார். அவர் தன் சீடர்களிடம் இதைக் கொடுத்தவனிடம் அவன் எனக்கு மிகப் பெரிய தொண்டு செய்துள்ளான் என்று சொல்லுங்கள் – அவன் எனக்கு என் உடம்பிலிருந்து விடுதலைக் கொடுத்துள்ளான் என்று சொன்னார்.

அவர் சாகும் தருவாயிலும் இந்த உடம்பைப் பொய்யாகப் பெருமைப்படுத்த வேண்டாம். புத்தர் என்பது தனிமனிதன் அல்ல. அது ஓர் அனுபூதி. உங்கள் உய்விற்காக நீங்களே பாடுபடுங்கள்” என்று சொன்னார்.
சாகும்போது கூட அவர் தமக்கென்று ஒரு சிறப்பையும் கோரவில்லை. அதற்காக அவரை நான் வழிபடுகிறேன். (7.261 – 3)



பக்கம் 194 - 201
புத்தகம் :- எனது பாரதம் அமர பாரதம்,
சுவாமி விவேகான்ந்தர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H