குலத்திற்கு நல் வாழ்வு தருகின்றன. கடமைகளை
எல்லாமக்களும் உணர்ந்து அவரவர் பணி
செய்தால், எல்லோருடைய உரிமையும் நலன் களும்
முழுமையாகக் காக்கப்படும்.
கடவுள் எல்லாமுமாக இருக்கிறார். நானுமாக
இருக்கிறார். நீயுமாக இருக்கிறார். எனக்குப்
கடவுளுக்கும் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கிறது
ஒருமுனை நான், இன்னொரு முனை அவர் என்று
இருக்கும் போது அவரைத் தேட
அலையவேண்டியதில்லை.
கடமையில் சிறந்து விளங்குபவன் கடவுளை
நாடுபவன் ஆவான். கடவுளை உணர்ந்த மனிதன்
கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பான்
கடமையை உணர்ந்து செய்யும் போது நிச்சயம்
தெய்வீக நிலையைப் பெற முடியும்.
மனோசக்தியையும், உயிர்ச்சக்தியையும்
கணநேரத்தில் வெளியேற்றும் தன்மை கவலைக்கு
உண்டு. அதனால், கவலையை ஒழித்த
மகிழ்ச்சியோடு வாழும் வகையை அறிவது
அவசியம்