நல்லாசிரியர் விருது... - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 11 September 2019

நல்லாசிரியர் விருது...

பள்ளியினுள் வாகனத்தை நிறுத்தியவுடன் ஓடி வந்து, ஒரு கூட்டம் வணக்கம் சொல்லி, "நான் தான் சாருக்கு முதலில் வணக்கம் சொன்னேன். இல்லை நான் தான் முதலில் வணக்கம் சொன்னேன்" என்று செல்லமாய் சண்டைகளிட்டு துள்ளி குதிக்கும் போதும்..................

"ஆசிரியரின் பையை நான் தான் கொண்டு போவேன். இல்லை நான் தான் கொண்டு போவேன்"என்று அன்பால் வாக்குவாதம் செய்யும்போதும்..............

பாடம் நடத்தும் போது சிறிய இருமல் வந்து விட்டால், "இந்தாங்க சார் தண்ணி" என்று நான்கிற்கு மேற்பட்ட செல்லங்கள் அன்பாய் நீட்டும் போதும்........

பள்ளிக்குச் செல்லாத நாளுக்கு அடுத்த நாள் செல்லுகையில் உரிமையோடு ஓடி வந்து, ஏன் சார் வரவில்லை. "என்ன ஆச்சி உங்களுக்கு" என்று விசாரிக்கும் போதும்...................

புதுப் பேனா ஒன்னு வாங்கி, "முதல் எழுத்து, நீங்க எழுதித் தாங்க" சார்னு கேட்கும் போதும்

பென்சில் இருந்தா கொடுங்கடா என்று கேட்கும் போது, அனைவருமே அவசரத்தில் பையில் தேடி, பென்சில் தவிர மற்ற அனைத்தையும் எடுக்கும் வேளையில்,  இந்தாங்க சார்னு முன் பெஞ்சி மாணவன் உலகையே ஜெயித்தவன் போல் நீட்டும் போதும்...........

ஆசிரியர் தினமன்று ஓடி வந்து, கை குலுக்கி, பயத்தில் பாதி முழுங்கி நல்வாழ்த்து கூறும் போதும்.........

ஐந்து ரூபாய் பேனா வாங்கி, "ஆசிரியர் தின வாழ்த்துக்கள்" சார் என்று தந்து, நான் "சாருக்குப் பேனா கொடுத்தேன் நான் சாருக்குப் பேனா கொடுத்தேனு" அன்றைக்கு முழுவதும், நாம் அத வச்சி எழுதுகிறோமா என்று எட்டிப் பார்க்கும் போதும்

வருகின்ற மகிழ்வு தான்
ஒரு ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது.

பள்ளியைக் கோவிலாகவும், மாணவர்களைச் சோறிடும் தெய்வமாகவும் நினைக்கும் ஒரு நல்ல ஆசிரியருக்கு இதுவே நல்லாசிரியர் விருது.!!!

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.