உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad
Post Top Ad

Join Our Kalvikural Telegram Group - Click Here

Wednesday, 16 October 2019

உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...!

உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...!


உடலின் இரத்த ஓட்ட அமைப்பு தான் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் அனுப்புவதற்கு பொறுப்பாகும். எப்போது ஒருவரது உடலின் குறிப்பிட்ட பகுதியில் இரத்த ஓட்டம் குறைகிறதோ, அப்போது அதற்கான அறிகுறிகளை உணரக்கூடும். பெரும்பாலும் உடலில் இரத்த ஓட்டம் மோசமாக இருக்கும் பகுதி என்றால், அது கைகள் மற்றும் கால்கள் தான்.
மோசமான இரத்த ஓட்டம் ஒரு பிரச்சனை மட்டுமல்ல, இதை சாதாரணமாக விட்டால், அது மிகப்பெரிய நோய்க்கு வழிவகுத்துவிடும். எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். நமது உடலில் சுமார் 60 ஆயிரம் மைல் நீளமான இரத்த நாளங்கள் உள்ளது என்பது தெரியுமா? மேலும், உங்கள் இதயத்திலிருந்து மற்ற தசைகள் வரை, அவை ஒரு இரத்த அமைப்பை உருவாக்குகின்றன. உங்கள் உடலில் இருக்கும் இந்த நெட்வொர்க்குகள் உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் இரத்தத்தைக் கொண்டு செல்கின்றன.
ஆனால் எப்போது இரத்த ஓட்டத்தில் தடையோ, அடைப்போ ஏற்படுகிறதோடு, அப்போது உடலில் பிரச்சனைகள் எழ ஆரம்பிக்கும். MOST READ: உடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்! இந்த கட்டுரையில் மோசமான இரத்த ஓட்டத்திற்கான சில அறிகுறிகளும், அதற்கான காரணிகள் மற்றும் அதை சரிசெய்யும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...! 
மோசமான இரத்த ஓட்டத்திற்கான சில அறிகுறிகள்! * கை மற்றும் கால்களில் இரத்த ஓட்டம் போதுமானதாக இல்லாத போது, கைகள் மற்றும் கால்கள் குளிர்ச்சியாவதோடு, மரத்துப் போகும். * சருமம் மிகவும் சுத்தமாக காணப்பட்டு, அதன் பின் நீல நிற கோடுகள் தென்பட ஆரம்பிக்கும். * மோசமான இரத்த ஓட்டம் சருமத்தை வறட்சி அடையச் செய்யும். * நகங்கள் எளிதில் உடையும். * தலைமுடி அதிகம் உதிர ஆரம்பிக்கும். * சில ஆண்கள் விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுவார்கள். * சர்க்கரை நோய் இருந்தால், சிறு கீறல்கள் ஏற்பட்டாலும், 
அந்த காயங்கள் குணமாவதற்கு தாமதமாகும். உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...! மோசமான இரத்த ஓட்டத்திற்கான காரணிகள்! புகையிலை சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின், தமனிகளின் சுவர்களைப் பாதிக்கும் மற்றும் இரத்தத்தை அடர்த்தியாக்கும். இதன் விளைவாக இரத்தத்தால் எளிதில் பாய முடியாமல் போகிறது. எனவே நீங்கள் புகைப்பிடிப்பவராயின், உடனே அப்பழக்கத்தைக் கைவிடுங்கள். இப்படி புகைப்பழக்கத்தை உடனே கைவிடுவது கடினமான ஒன்று தான்.
ஆனால் இப்பழக்கத்தை விடுவதன் மூலம் நிச்சயம் இரத்த ஓட்டம் சீராகும். உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...! உயர் இரத்த அழுத்தம் ஒருவரது இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அது பெருந்தமனி தடிப்பை உண்டாக்கும். இந்த நிலையால் தமனிகளின் சுவர்கள் தடித்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தும். ஒருவரது இரத்த ஓட்டம் 120-க்கு அதிகமாக மற்றும் 80-க்கு குறைவாகவோ இருக்கக்கூடாது. 
எனவே அடிக்கடி மருத்துவரிடம் சென்று இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டியது அவசியம். அதுவும் மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...! சர்க்கரை நோய் சர்க்கரை நோய் ஒருவரது இரத்த சர்க்கரை அளவை மட்டும் பாதிப்பதில்லை, இரத்த ஓட்டத்தையும் தான் பாதிக்கும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு கால்களில் வலி, பிடிப்புகள் அடிக்கடி ஏற்படுவற்கு காரணம், மோசமான இரத்த ஓட்டம் தான். 
அதிலும் சர்க்கரை நோய் முற்றிய ஒருவருக்கு மோசமான இரத்த ஓட்டத்திற்கான அறிகுறிகளை கண்டறிவது என்பது கடினம். ஏனெனில் சர்க்கரை நோய் நரம்பியல் முனைகளில் உணர்வைக் குறைத்துவிடும். எனவே தான் சர்க்கரை நோயாளிகளுக்கு இதயம் மற்றும் இரத்த நாள பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...! உடல் பருமன் ஒருவரது உடல் எடை அதிகரிக்கும் போது, உடல் பருமனாகிறது. ஒருவர் மிகவும் பருமனான உடலுடன் இருந்தால்,
 உட்காரும் போதோ அல்லது நின்று கொண்டிருக்கும் போதோ, இரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் தான் குண்டாக இருப்பவர்கள், பல ஆரோக்கிய பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகிறார்கள்.
உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...! நரம்பு சுருட்டல் அல்லது வெரிகோஸ் வெயின் ஒருவர் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தாலோ அல்லது நின்று கொண்டிருந்தாலோ, அவர்களது கணுக்கால்களின் பின்புறத்தில் பெரும்பாலும் நரம்புகள் வெளிப்படையாக சுருண்டு காணப்படும். 
இப்படி நரம்புகள் சுருண்டு இருப்பதால், இரத்த ஓட்டம் குறைவதோடு, இரத்தம் உறைந்து, கடுமையான கால் வலியை சந்திக்கக்கூடும். உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...! மோசமான இரத்த ஓட்டத்தை சரிசெய்யும் வழிகள்! நீர் பருகவும் உடலில் உள்ள இரத்தத்தில் பாதி நீர் உள்ளது. எனவே ஒருவர் தினமும் போதுமான அளவு நீரைப் பருக வேண்டும். அப்படி பருகினால் தான் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஒரு நாளைக்கு குறைந்தது டம்ளர் நீரைப் பருக வேண்டியது அவசியம். 
அதிலும் அதிகம் உடற்பயிற்சி செய்தால் அல்லது கோடைக்காலத்தில், இன்னும் அதிகளவு நீரைப் பருக வேண்டும். உடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...! நீண்ட நேரம் உட்காரக்கூடாது ஒரே இடத்தில் பல மணிநேரமாக உட்கார்ந்தால், இரத்த ஓட்டம் மோசமடையத் தொடங்கும். இதனால் இரத்தம் உறைந்து, கால் தசைகள் பலவீனமடையும் மற்றும் பாதங்களில் இரத்த ஓட்டம் குறைய ஆரம்பிக்கும். ஒருவேளை நீங்கள் உட்கார்ந்து தான் வேலை செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், மேசையைப் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால், ஒட்டுமொத்த உடலிலும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.