💉எலும்பு முறிவு காய்ச்சல் எனப்படும் டெங்கு ஏடிஸ் என்ற ரக கொசு மூலமாக பரவுகிறது. இந்த கொசு கருப்பு நிறத்தில் இருக்கும். அதன் உடலில் வெள்ளை நிற புள்ளிகள் காணப்படும். இதனால் "புலி கொசு" எனவும் இதற்கு பெயருண்டு.
💉டெங்கு கொசு காலை மற்றும் மதிய நேரம் மட்டுமே கடிக்கும்.
💉இந்த கொசு மூலம் காய்ச்சல் பாதித்த ஒருவரின் இருமல், தும்மல், போன்றவற்றால் காய்ச்சல் பரவாது.
💉104 டிகிரி வரை உள்ள காய்ச்சலுடன் தலை வலி, தசை வலி, கண் வலி, வாந்தி, உடலில் அரிப்பு, மூட்டு வலி போன்றவை வரும்.
💉பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
💉மூன்று நாளுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால்
- என் எஸ் ஐ ஆன்டிஜென் (NS1 Ag)
- டெங்கு ஐ ஜி எம் (Dengue IgM)
- டெங்கு ஐ ஜி ஜி (Dengue IGG)
உள்ளிட்ட இரத்தப் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்.
💉 ஒவ்வொருவருக்கும் தட்டணுக்களின் எண்ணிக்கை 3 லட்சம் வரை இருக்க வேண்டும். ஆனால், டெங்கு காய்ச்சல் வந்துவிட்டால் தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துவிடும்.
- இவ்வாறு நிகழ்வதால் நுரையீரல், வயிறு, சிறுநீர்ப்பாதையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து உள்ளது. இதனால் உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் மரணம் நேரிடும்.
- தட்டணுக்கள் மிகக் குறையும் பட்சத்தில் தட்டணுக்கள் கொண்ட ரத்தம் ஏற்றப்பட வேண்டும்.
- சிலருக்கு தட்டணுக்கள் குறைந்து நுரையீரல் பகுதியில் நீர் தேங்கி கொள்ளும். அதனால், டெங்கு ஷாக் சினட்ரோம் வர வாய்ப்புண்டு. இது மரணத்தை உருவாக்கும். எனவே ஜுரம் வந்தால் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
💉இதற்கு தடுப்பூசி மருந்து கிடையாது.
💉நீர்ச்சத்தை குறைத்து விடும் என்பதால் நீர் இழப்பை தடுக்க திரவ உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
💉மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது
💉டெங்குவை பரப்பும் ஏ டி எஸ் எஜிப்தி நன்னீரில் மட்டுமே முட்டையிட்டு வளரும். வீடுகளில் மூடப்படாத டிரம்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வீடுகளில் சரியாக மூடப்படாத சம்ப், போன்றவற்றில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிட்டு பெருகும். இதனால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.