அறைக்கும் அறைக்கும்
பேசிக்கொண்டது பிணங்கள்
வயக்காட்டுக்கு வெட்டி வைக்க எல்லை தாண்டித் தண்ணி வருதுன்னு அருவா தூக்கினாயடா....
உன் அழுகிய உடலில்
இருந்து நீர் வழிந்து
என் அறையும் தாண்டி ஓடுதடா .
கோடி பணம் கையில் இருந்தும் பத்து ரூபா இல்லாதவனுக்கு
கொடுக்கலையடா நீ
ஒத்தை ரூபாய் நெற்றியில் அதுவும் துருப்பிடித்து
எலும்புகளுக்கிடையே கிடக்குதேடா .
பட்டணத்துப் பங்களாவும்
சொகுசு காரும் தங்க
ஆடையுமென அலைந்தாயடா
அதில் ஒரு துரும்பைக் கூட கொண்டு வர முடியல டா.....
மலடி என்றே சொன்னாயடா
அரித்துக் கொண்டிருக்கிறது
உடம்பெல்லாம் புழு பூச்சி என்றே சொல்லுதடா.....
அதிகாரத் திமிரும்
சாதி மதவெறியும்
தலைமேல் கொண்டாயடா
இங்கு எல்லாம் கொட்டி மண்டை ஓடு மட்டும் கிடக்குதடா....
பொதுப் பாதைக்கு இடம் விடச் சொல்லி கேட்கலையேடா நீ
அத்தனை ஏக்கர் இடமிருந்தும் அரை அடி கூட உனக்கு
அதிகம் தரலையடா ....
நல்லது கெட்டதுக்கு உறவுகள் இருந்தால் போதும் என்றாயடா
நான்கு பேர் தூக்கித் தானே அசைந்து வந்திருக்கேயடா...
உயிர்பிழைக்க ரத்ததானம் செய்ய முடியலையடா
ரத்தமெல்லாம் சாலையிலேயே
விட்டுவிட்டு வந்தாயடா...
இப்படி மண்ணோடு
மண்ணாகிப் போகுமென்று
தெரிந்திருந்தால்.....
வீணாப்போகும்
இந்த உறுப்புக்களையும்
உடம்பையும் தானம்
செய்து இருக்கணுடா ...
தானம் செய்திருக்கணு
யாருக்கு புரியும்டா
இங்கு வந்து தெரிஞ்சுக்கட்டும்டா .....