டிசம்பர் - 11 :
பாரதி பிறந்த தினம்.
செல்லம்மா....
பெரும் பொழுது
ரெளத்திரம் பழகிய
எனக்கு,
சிறு பொழுது
காதல் கற்று தந்தவள்...!
அதே காதலுக்காக
என் அதீத
கிறுக்குத் தனங்களை
பூமா தேவியாய்
பொறுத்துக் கொண்டவள்...!
என் வயிற்றுப் பசிக்கு
எங்கெங்கோ அலைந்து
அவள் சமைத்துத்
தந்த உணவை,
காக்கைக்கும் குருவிக்கும்
பகிர்ந்தளித்தமைக்கு
சிறு கோபமும் காட்டாதவள்...!
கண்ணம்மாக்களை
எழுதப் பிடிக்கும்,
செல்லம்மாவோடு மட்டுமே
வாழத் துடிக்கும்...!
இவண்...
சுப்ரமணிய பாரதி.