
முன்பு, பான் கார்டு பெற வேண்டுமெனில், அந்த மையங்களுக்கு சென்று குறிப்பிட்ட படிவங்களை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
அதனையடுத்து 14 நாட்களில் உங்களுக்கு பான் எண் கிடைத்து வந்தது.
ஆனால் இப்போது பான் எண் பெறும் முறையை, வருமானவரித்துறை மிக மிக எளிமை ஆக்கியுள்ளது.
ஆதார் விபரங்களை கொண்டு இ-பான் சேவையை உடனே பெறும் வழிமுறையை வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதார் எண், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண், ஆதாரில் சரியான விபரங்கள், கேஒய்சி விபரம் சரிபார்க்கப்பட்டிருந்தல் உள்ளிட்ட விபரங்கள் இருந்தாலே, இ-பான் சேவையை நாம் எளிதாக பெற்றுவிட முடியும்.
இ-பான் பெற விண்ணப்பிப்பது எப்படி?
இ – பான் பெற விரும்புபவர்கள் இந்த //www.pan.utiitsl.com/PAN/newA.do இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
அதில், Apply for new PAN card (Form 49A) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பின் இ-பான் வேண்டுமெனில், டிஜிட்டல் மோடை தேர்வை செய்ய வேண்டும்.
இந்த டிஜிட்டல் மோட் முறையில், எந்தவொரு ஆவணங்களையும் இணைக்க தேவையில்லை.
ஆதார் அடிப்படையிலான இ- கையெழுத்து அல்லது டிஜிட்டல் சிக்னேச்சர் இருந்தாலே போதுமானது.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு ஓடிபி வரும். அதனை உள்ளீடு செய்து இ-பானை நாம் பெறலாம்.
பிறந்த தேதி ஆவணம், முகவரி ஆவணம் போன்ற எந்தெவாரு ஆவணமும் நாம் இணைக்கத்தேவையில்லை.
ஆதார் டேட்டாபேசில் உள்ள நமது விபரங்களை ஆவணங்களாக கொண்டு இ- பான் சேவை வழங்கப்பட்டு வருகிறது.
ஸ்கேன் செய்யப்பட்ட நமது கையெழுத்து, ஒரு போட்டோவை நாம் இணைக்க வேண்டும்.
ஆதாரில் விபரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் இ-பான் சேவை பெறுவது ரத்து ஆக வாய்ப்பு உள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் வாயிலாக நாம் பான் கார்டு,
இபான் கார்டு மற்றும் பான் கார்டு ( செலவு ரூ.107) அல்லது இ – பான் கார்டு ( செலவு ரூ.66) என நமது தேவை மற்றும் வசதிக்கேற்ப தேர்வு செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.