Best TET Coaching Center n Chennai
| இதுவரை 25000 நபர்கள் கல்விக்குரலின் Telegram Group-ல் உள்ளனர். நீங்கள் உடனடியாக இணையவேண்டுமா ? Click Here |
| 1முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் NOTES OF LESSON PDF-வடிவில் உள்ளது -CLICK HERE |
ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்விற்கு தயாராகும் ஆசிரியர் பெருமக்களுக்கு QB365 என்ற போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு நிறுவனம் தனது வலை பக்கத்தில் TET PAPER 1 மற்றும் PAPER 2 அனைத்து பாடங்களுக்கும் online test உருவாக்கியுள்ளது. ஒருமுறை சென்று பார்வையிடலாமே..
10,11,12 Public Exam Preparation March-2026
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
14-01-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 460
அதிகாரம் : சிற்றினஞ்சேராமை
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
பொருள்:
ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
வெற்றியை விட தோல்விக்கு பலம் அதிகம், வெற்றி சிரித்து மகிழ வைக்கும். தோல்வி சிந்தித்து வாழ வைக்கும்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
A honey tongue and a heart of gall
அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Gear - பற்சக்கரம்
2. Geology - நிலவியல்
3. Ghat - மலைக்கணவாய்
4. Gilt - தங்க முலாம்
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. தமிழர்களின் பாரம்பரிய விழாவாக கொண்டாடப்படுவது எது?
பொங்கல்
2. இந்திய தரைப்பட தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
ஜனவரி 15
✡✡✡✡✡✡✡✡
Daily English
1. We play cricket on all holidays.
2. He has achieved a lot this term.
3. Banu agreed to come to the party
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
பேரிக்காய்
🍏 பேரிக்காய்கள் ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளை தாயகமாகக் கொண்டவை.
🍏 சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயன்படுகிறது.
🍏தமிழ்நாட்டின் சில இடங்களிலும், இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளிலும் இந்தோனேஷியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இது பயிரிடப்படுகிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
பெரிய மீன் சிறிய மீன்
பிரபலமான தத்துவவாதி ஒருவர் முல்லா வசிக்கும் ஊரை கடந்து செல்ல நேரிட்டது. அப்போது அவர் அவ்வழியாக வந்த முல்லாவிடம் நல்ல உணவு விடுதி எங்குள்ளது என்று கேட்டார். முல்லா அதற்கு பதில் சொன்னார். தத்துவவாதி முல்லாவையும் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்தார்.
முல்லா அவரை அருகிலிருந்த உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கே போனப்பிறகு அன்றைய சிறப்பான உணவுப்பொருள் என்ன? என்று கடையில் உணவு பரிமாறுபவரை பார்த்து முல்லா கேட்டார். மீன்! புதிய மீன்! என்று பதில் சொன்னார். இரண்டு துண்டுகள் நல்லதாக கொண்டு வாருங்கள் என இருவரும் ஆர்டர் செய்தனர்.
சிறிது நேரம் கழித்து, கடையில் உணவு பரிமாறுபவர், ஒரு பெரிய தட்டில் இரு மீன் துண்டுகளை வைத்துக் கொண்டு வந்தார். அதில் ஒரு துண்டு பெரியதாகவும், இன்னொரு துண்டு சிறியதாகவும் இருந்தது. அதைக் கண்டவுடன் முல்லா எந்தவொரு தயக்கமில்லாமல் பெரிய மீன் துண்டை எடுத்து தனது தட்டில் போட்டுக் கொண்டார். அதற்கு தத்துவவாதி, முல்லா நீங்கள் நடந்து கொண்ட முறையானது எந்த தர்ம, நீதி, நியாய, மத சாஸ்திரத்துக்கும் ஒத்துவராத ஒன்றாகும் என்றார்.
அதற்கு முல்லா நீங்களாக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்றார். நான் மனிதனாகையால் சிறு மீன் துண்டை எடுத்திருப்பேன். அப்படியா, ரொம்ப நல்லது. இந்தாருங்கள் உங்கள் பங்கு என்று சொல்லி சின்ன மீன் துண்டை எடுத்து அவர் தட்டில் வைத்தார்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வந்த 40 பேருக்கு மீண்டும் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது.
🔮வரலாறு காணாத கனமழையால் அமீரகம் வெள்ளத்தில் மிதக்கிறது. துபாயில் ஒரு மணி நேரத்தில் 15 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
🔮இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஸ்ரீகாந்த், பும்ராவுக்கு விருது வழங்கப்பட்டது.
🔮தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப்புக்கு தூக்கு தண்டனை ரத்து.
🔮மாட்டுப் பொங்கலன்று 10 ரூபாயில் சென்னையை சுற்றி பார்க்கலாம்; சுற்றுலாத்துறை அறிவிப்பு.
HEADLINES
🔮Lahore High Court annuls Musharraf’s death sentence.
🔮Mahinda Rajapaksa to visit New Delhi in February.
🔮Maradu demolition decision a ‘painful duty’, says Supreme Court.
🔮India drops to 84 in Passport Index, Asian countries lead.
🔮Virat Kohli one ton away from equalling Sachin Tendulkar's feat.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
| 10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
| Tamil | Tamil | Tamil |
| English | English | English |
| Mathematics | Mathematics | Mathematics |
| Science | Physics | Physics |
| Social Science | Chemistry | Chemistry |
| 10th Guide |
Biology | Biology |
| Second Revision | Commerce | Commerce |
| Mathematics all in one | Accountancy | Accountancy |
| Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |








