ஒவ்வொரு ஆண்டும், தட்சிணாயணம், உத்திராயணம் என இரண்டு பகுதியாகப் பிரிக்கப்படுகின்றது. ஆறு மாதம் தட்சிணாயணம். ஆறு மாதம் உத்திராயணம். சங்கராந்தி முதல் - பொங்கல் முதல், உத்திராயணம் வருகிறது. உத்திராயணம் வடக்கு நோக்கி சூரியனுடைய நிலைமாறுகிறது. அவருடையே போக்கு மாறுகிறது. ஆகவே ஒளி அதிகமாகக் கூடுகிறது. அதற்கு முன் ஒளி சற்று குறைவாக இருக்கும். அதை வைத்துத்தான் சங்கராந்தி நல்ல ஒளியோடு தொடங்கும் நாள் என்று சொல்லப்படுகிறது. அதை வைத்துத்தான் சபரிமலையிலும் ஜோதி தரிசனம் வைத்திருக்கிறார்கள். உத்திராயணம் முதல், மங்கள காரியங்களை செய்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. ஆனால், தட்சிணாயணத்தில் மங்கள காரியங்கள் செய்ய மாட்டார்கள். தட்சிணாயணம் என்பது தேவர்களின் இரவு காலம். ஆகவே இரவு காலத்தில் எந்த மங்கள காரியமும் செய்யக்கூடாது. உதயகாலம் முதல் எல்லாம் செய்யலாம். ஆகவே தை மாதம் முதல் அனைத்து காரியங்களுக்கும் சிறப்பான காலம்.
உஷத் காலம் - மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுடைய உஷத் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது. இந்த மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின், தை வந்த பிறகு தான் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பகவத் சம்பந்தமான மங்கள காரியங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும். மனித வாழ்க்கை சம்பந்தமான மங்கள காரியங்கள் தை மாதத்தில் நடைபெறும்.
போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள். காக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம். மறுநாள் சங்கராந்தி அன்று பிரத்யட்ச தேவதையான சூரியனுக்கு பூஜை செய்வது விசேஷம். அதற்கு மறுநாள் நமக்கெல்லாம் பால் தரும் பசுவை பூஜிக்க வேண்டிய நாள் இப்படி எல்லா ஜீவராசிகளுக்கும் இந்த மூன்று நாட்கள் மிகவும் பொருத்தமானது.
மனிதன் எல்லா ஜீவராசிகளோடும், தேவதைகளோடும் தனக்குள்ள தொடர்பை நினைவு படுத்திக் கொள்ளும் நாளாக வருவது இந்தப் பொங்கல் திருநாள்.
இந்தப் புண்ணியத் திருநாளில், ஒளி கொடுக்கும் நன்னாளில், நாம் சூரியனை வழிபட்டு, தேவதைகளின் அருளைப் பெற பூஜைகள் செய்து, அந்த ஒளியின் மூலம் நம் மனத்தில் உள்ள இருளை அகற்றி, நல்ல புத்தி ஒளி பெற்று, நல்வழி கிடைப்பதற்கு எல்லோருக்கும் ஆசீர்வாதம் செய்கின்றோம்!
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இதுநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. பழந்துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை.
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் பூலாப்பூ
போகி பண்டிகையோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
மார்கழி மாதம், சாதாரணமாகவே சூரியோதய காலத்தில் பூஜை, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. தேவதைகளுடைய உஷத் காலமாக மார்கழி மாதம் அமைந்துள்ளது. அந்த சமயத்தில் பூஜை, பஜனை போன்றவை தவிர வேறெதுவும் செய்யும் பழக்கமே கிடையாது.மார்கழி மாதம் பக்தி செய்வதற்கே உண்டானது. இதற்குபின், தை வந்த பிறகு தான் கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். பகவத் சம்பந்தமான மங்கள காரியங்கள் மார்கழி மாதத்தில் நடைபெறும்.போகிப் பண்டிகைமார்கழி மாதத்தின் கடைசி நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகிக் பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள்.முன்னோர்களுக்கு பூஜைகாக்கை முதல் அனைத்து உயிரினங்களுக்கும் உணவிடுவது போகிப் பண்டிகையின் விசேஷம்.பழையன கழிதல்பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது.தேவையில்லாத குப்பைபோகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம்.
பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும்.பித்ரு பூஜைபோகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, தேங்காய்- வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.பறை கொட்டி மகிழ்ச்சிபொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
போகி பண்டிகை என்றால், வீட்டில் இருக்கும் பழைய சாமன்களை போட்டு எரிப்பது என்று பொதுவாக சொல்வார்கள். எழையின் வீட்டில் புதிய பொருள் என்ன பழைய பொருள் என்ன இருந்ததே சில பொருட்கள் தான். எனவே வீட்டு பொருட்களை போட்டு எரிக்கும் பழக்கம் இல்லை. தோட்டத்தில் இருக்கும் காய்ந்த மரம் கிளை, செடி கொடிகள சேகரிப்பது, வீட்டில் இருக்கும் பழைய காகிதங்கள், தேவைப்படும் போது குப்பை தொட்டியில் இருந்த எரிக்க தகுந்த பொருட்களை சேகரித்து, எந்த இடத்தில் வேண்டுமானலும் எரித்து இரவில் போகி கொண்டாடியது எனது அனுபவம். நானும் நண்பர்களும், இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பொருட்களை சேகரிப்பதும், சேகரித்த பொருட்கள வீட்டின் அருகில் குவித்து வைப்பதால், பெரியவர்களிடம் அடிவாங்குவது சகஜம்.
போகி பண்டிகை கொண்டாட மேளம் தேவை அல்லது உடுக்கை தேவை. அதன் அன்றைய விலை ஒரு அணா (6 காசு) அதற்காக வீட்டில் அடி உதை வாங்கி காசு வாங்க வேண்டும்.
வாங்கிவிட்டால், இரவு பகல் பாரமல் 2-3 நாட்கள் மேளம் கொட்டி மக்களின் தூக்கத்தை கெடுப்பது ஒரு சந்தோசமான விளையாட்டு.
காகிதங்களை எரித்து, அதில் மேளத்தை சூடி காட்டி, குச்சி வைத்து தட்டி நெருப்பை சுற்றி வந்து நடனம் ஆடுவது ஒரு ஆனந்த கூத்து.
அந்த நடனத்தை அடிப்படையாக கொண்டு, மேளம் அடித்து கொண்டு, நெருப்பை சுற்றிவந்து நடனம் ஆடுவது மற்றும் மற்ற வீடுகளின் முன்பு நடனம் ஆடுவதில் ஒருவிதமான இன்பம். இந்த மேளம் அடித்து நடனம் ஆடுவது, பொங்கலுக்கு பின்பும் தொடரும். பெரியவர்களிடம் பொங்கல் இனாம் (காசு) வாங்கி அதில் திரைப்படம் பார்ப்பதுடன் பொங்கள் விழா முடிவடையும்.
அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.
இல்லம் தோறும் போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கர்ப்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு படைக்கப்படும்.








