உலகின் முதல் உயிருள்ள ரோபோ!'- தவளை செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட `ஜெனோபாட்' - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2021| HEALTH TIPS |TNTET 2021:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Sunday 19 January 2020

உலகின் முதல் உயிருள்ள ரோபோ!'- தவளை செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட `ஜெனோபாட்'

`உலகின் முதல் உயிருள்ள ரோபோ!'- தவளை செல்களிலிருந்து உருவாக்கப்பட்ட `ஜெனோபாட்'


தவளைகளிலிருந்து ஸ்டெம்செல்களைப் பயன்படுத்தி, உலகின் முதல் உயிருள்ள ரோபோக்களை அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகம் (Vermont) மற்றும் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் (Tufts) சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 
ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜெனோபஸ் லேவிஸ் (Xenopus laevis) என்ற தவளையினத்தின் ஸ்டெம் செல்களைக் கொண்டு உருவாக்கியதால், இவற்றுக்கு 'ஜெனோபாட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள், ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான (0.04 அங்குலங்கள்) அகலம் கொண்டவை. 
இந்த அளவு, மனித உடல்களுக்குள் பயணிக்கப் போதுமானது. இவற்றால் நடக்கவும் நீந்தவும் முடியும். பல வாரங்கள் உணவு இல்லாமல் உயிர்வாழ முடியும். ஸ்டெம்செல்கள், நம் உடலில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு செல்கள்.
ஸ்டெம்செல்களுக்கு நம் உடலில் பல்வேறு வகை செல்களாக மாறி வளர்ச்சியடையும் ஆற்றல் உள்ளவை. நம் உடலின் பழுதுபார்க்கும் அமைப்பாகச் செயல்படுவதும் இந்த ஸ்டெம் செல்களே.ஸ்டெம்செல் என்பது... 
ஆராய்ச்சியாளர்கள், தவளையின் கருக்களிலிருந்து உயிருள்ள ஸ்டெம்செல்களை எடுத்து, அவற்றைப் பதப்படுத்தி, ஒரு சூப்பர் கம்ப்யூட்டரின் உதவி கொண்டு அவற்றை குறிப்பிட்ட வடிவங்களாக மாற்றியமைத்தனர். பின்னர், இந்த செல்கள் அவற்றின் வேலைகளை சுயமாக செய்யத் தொடங்கின. 
இந்த ஜெனோபாட்டுகளுக்கு சுயமாகத் தன்னை குணப்படுத்திக் கொள்ளும் திறன் உண்டு. விஞ்ஞானிகள் ஒரு ரோபோவை வெட்டியபோது, ​​அது தானாகவே குணமடைந்து நகர்ந்தது. இந்த 'உயிரியல் இயந்திரம்' எஃகு மற்றும் பிளாஸ்டிக்கால் உருவான, வழக்கமான ரோபோக்களால் செய்ய முடியாத விஷயங்களையும் செய்யும். 
வழக்கமான ரோபோக்களைப் போலில்லாமல் உயிரியல் இயந்திரங்களாக, ஜெனோபாட்டுகள் சுற்றுச்சூழல் நட்பு மற்றும் மனித ஆரோக்கியத்திற்குப் பாதுகாப்பானவை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தம்செய்வதற்கும், பெருங்கடல்களில் மைக்ரோபிளாஸ்டிக் சேகரிப்பதற்கும், மனித உடல்களுக்குள் மருந்துகளை எடுத்துச்செல்வதற்கும் ஜெனோபாட்டுகள் பயன்படுத்தப்படலாம். ஊட்டச்சத்துகள் இல்லாமலே, பல வாரங்களுக்கு ஜெனோபாட்டுகள் நீர்ச்சூழலில் வாழ முடியும். 
இதனால் அவை உடலின் உள்ளே மருந்தை எடுத்துச்செல்ல ஏற்றவை. மேலும், மனித உடல் பற்றி அறிய ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெனோபாட்டுகள் உதவக்கூடும், மனித வாழ்வின் எதிர்கால முன்னேற்றத்திற்கான கதவுகளை இது திறக்கக்கூடும்.
`World's First Living Robot! - `Xenopod 'made from frog cells
Scientists from the University of Vermont and Tufts University of the United States have created the world's first living robots using stem cells from` xenopods made from frog cells. The genus Xenopus laevis from Africa is named after the stem cells of the genus Xenopus laevis. 

These machines are less than one millimeter (0.04 inches) wide. This size is enough to travel into human bodies. They can walk and swim. Can survive for several weeks without food. Stemcells are the basic structural cells in our body. Stemcells have the potential to turn into different types of cells in our body. 

These stem cells function as our body's repair system. Later, these cells began to do their jobs independently. These xenophobes have the ability to heal themselves. When scientists cut a robot, it automatically healed and moved. This 'biological machine' will also do things that conventional robots cannot make of steel and plastic. 

Unlike conventional robots as biomechanics, xenobots are environmentally friendly and safe for human health. Zenobots can be used to clean up radioactive waste, collect microplastic in the oceans, and carry drugs into human bodies. Without nutrients, xenophobes can survive in the waterfront for several weeks. 

They are thus suitable for injecting medicine into the body. Moreover, xenophobes may also help researchers to learn about the human body, which may open the door for future development of human life.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H