லண்டனிலுள்ள ஜோசப் லிஸ்டர் (Joseph Lister) என்ற மருத்துவரால் நச்சுத்தடை (antiseptics) முதலாவதாகப் பயன்படுத்தப்பட்டது. பிரெஞ்சு மருத்துவர் லூயிஸ் பாஸ்டர் (Louis Pasteur) நோய்க்கேடுகள் வேதியியல் தன்மைகளால் அல்லாமல் உயிருடைய நுண்ணுயிரிகளால் ஏற்படுகின்றன எனக் கண்டுபிடித்திருந்த அறிவு ஜோசப் லிஸ்டருக்கு பெரிதும் துணையாயிற்று.
லிஸ்டர், புண்ணில் நுழைந்து நச்சுத்தன்மை தருமுன் நுண்ணுயிரிகளை (bacteria) அழிக்க இயலும் என எண்ணினார். முதலில் கடும் எலும்பு முறிவுக்கு (compound fracture)ச் சிகிச்சை அளிக்கும்போது அவர் இதனை முயற்சி செய்தார். வளிமண்டலத்திலுள்ள (atmosphere) நோய் நுண்மங்கள் (germs) தடுக்கப்பட்டுப் புண்ணை (wound) நச்சுத்தன்மை உடையதாக ஆக்காமலிருக்கத் தொற்றொழி நீர்மப் பொருள் அல்லது நச்சரி நீர்மவகை (carbolic acid) புண்ணின் மீது போடப்பட்டது. இந்தச் சோதனை வெற்றி தந்தது. எனவே இம்முறை, அறுவைச் சிகிச்சையில் பெரிதும் முன்னேறுவதற்கு வழிவகுத்தது. பல வகையான வேறுபட்ட நச்சுத் தடைகள் (antiseptics), நுண்ணுயிரிகளை (bacteria) எதிர்த்து தடுக்கப் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டனர்.-Darwin Science Club
Salem Vellore Kumbakonam Dharmapuri