ஆனால் மனச்சோர்வு நோய்(depression) உள்ளவர்களுக்கு இத்தகைய உணர்வு பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடிக்கும்.
இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வேலை எல்லாமே பாதிப்படையும்.
1. எப்பொழுதும் சோகமாக இருத்தல் ( மதியம் மற்றும் சாயந்திர வேளைகளில் இது சற்றே மாறலாம் )
2. வாழ்க்கை மேல் பிடிப்பு,எதிலும் நாட்டம் மற்றும் மகிழ்ச்சி இல்லாமை.
3. சிறு விசயங்களில் கூட முடிவு எடுக்க முடியாத நிலை.
4. முன்பு எளிதாக செய்த வேலைகளை கூட செய்ய முடியாத நிலை.
5. எப்பொழுதும் உடல் சோர்வாக இருத்தல்
6. மனம் அமைதி இல்லாமல் சஞ்சலத்துடன் இருத்தல்
7. பசியின்மை. அதனால் உடல் எடை குறைதல். ( மிக சிலருக்கு அதிகமான பசி மற்றும் உடல் எடை கூடுதல் இருக்கலாம் )
8. தூக்கமின்மை. (தூக்கம் வருவதிற்கு அதிக நேரம் பிடிப்பது, முழு தூக்கம் கிடைக்காமல் அதிகாலை வேளைகளில் விழித்தல், முழு திருப்தி தராத தூக்கம் )
9. தாம்பத்திய உறவில் நாட்டமின்மை.
10. தன்னம்பிக்கை இல்லாமை,
11. தாழ்வு மனப்பான்மை, எதிர்காலத்தை பற்றிய வெறுமையான உணர்வு,
12. எளிதில் எரிச்சல் அடைதல்,
13. நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்கும் ஆர்வம் குறைந்து தனிமையை நாடுதல்.
14. வாழ்வதில் நாட்டமில்லாமல் தற்கொலை எண்ணம் மிகுதல், அதற்குரிய முயற்சிகளை செய்தல்.
15. அடிக்கடி தலைவலி மற்றும் உடம்பு முழுவதும் வலி, குடைச்சல்
சிதைந்து போன உறவு முறைகள்,
கிராமங்கள் அழிந்து நகரங்கள் உருவானது, நகரத்தில் இயந்திரமயமான வாழ்க்கை, கூட்டுக்குடும்ப மகிழ்ச்சி காணாமல் போனது, தன் வேலை, தன் வீடு என்ற குறுகிய மனப்பான்மையின் வளர்ச்சி,
யாரும் இல்லையோ என்ற பாதுகாப்பற்ற உணர்வு,
குடிபழக்கம் இப்படி பல காரணங்களை கூற முடியும். தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலோனோருக்கு குடி பழக்கம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
இதற்கான சிகிச்சை:
எல்லா நோய்களையும், அந்த நோய் தாக்கிய நபரால் விவரித்து விட முடியும். ஆனால் மன நோய் பாதிக்கப்பட்ட ஒருவரால் தனக்கு என்ன பிரச்னை என்பதை சொல்ல முடியாது. இந்த நிலையில்
மன அழுத்தம் அதிகமாகி கட்டுப்பாடற்ற நிலைக்கு செல்லும் போதுதான் மனநோய் ஏற்படுகிறது.
மன அழுத்தம் ஏற்படும் போது டாக்டரிடம் கலந்து ஆலோசித்து சிகிச்சை மேற்கொண்டால் அதிலிருந்து விடுபடமுடியும். மருத்துவத்தின் வளர்ச்சி மூலம் இந்த நோயை ஆரம்ப கட்டத்தில் 100 சதவீதம் குணமாக்க முடியும்.
தாங்களாகவே மனச்சோர்வுக்கு மருந்தாக மது அருந்த வேண்டாம்.அது மனச்சோர்வை மேலும் அதிகப்படுத்தும் .
குடும்ப பிரச்னைகள், பணபிரச்னைகளை அமைதலோடு தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
ஒரு நாளில் அரை மணியோ அல்லது ஒரு மணியோ உடல் பயிற்சி செய்யுங்கள்.
இது நடை பயிற்சியோ அல்லது உங்களுக்கு பிடித்த விளையாட்டாகவோ இருக்கலாம்.
தனிமையை தவிர்த்திடுங்கள்
நல்ல நண்பர்களுடன் மனம்திறந்து பேசுங்கள்🌹🌹🌹🌹