கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தில்,தினமும் 100 முக கவசம் தைத்து டைலர் ஒருவர் மக்களுக்கு இலவசமாக வழங்கி சேவை செய்து வருகிறார்.
தாகம்தீர்த்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் கிராம ஊராட்சியில் பணிபுரியும் டேங் ஆபரேட்டர் இவர் ஓய்வு நேரத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் தன்னாலான சேவையை செய்ய வேண்டுமென முடிவு செய்தார். தினமும் காட்டன் துணியால் 100 முக கவசங்களை தைத்து மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருகிறார் கடந்த ஒருவாரமாக இந்த சேவையை தொடர்ந்து ஓய்வு நேரத்தில் தைத்து வருகிறார் ஏழை மக்கள் பலர் இவரது வீடு தேடி வந்து முக கவசத்தை வாங்கிச் செல்கின்றனர் முக கவசம் கேட்டு வருபவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக இரவு நேரத்திலும் தையல் பணியை செய்கிறார்.
முகக்கவசம் செய்வதற்கு தேவையான காட்டன் துணிகள் இல்லாததால் மிகவும் கஷ்டப்படுகிறார்.ஜவுளிக்கடை வைத்துள்ள கள்ளக்குறிச்சி பகுதியை சார்ந்த தன்னார்வலர்கள் இவருக்கு துணி கொடுத்து உதவினால் அவரால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.இவரின் பணியினை மனதார வாழ்த்துகிறது கல்விக்குரல்.
இவரை தொடர்புகொள்ள செல் நெம்பர்: 98946 17151.