தங்கம் விலை வீழ்ச்சி.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad
Post Top Ad

Join Our Kalvikural Telegram Group - Click Here

Monday, 30 March 2020

தங்கம் விலை வீழ்ச்சி.. தேவை குறைவு தான் காரணமா.. இன்னும் குறையுமா..!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை மத்திய அரசு பிறப்பித்துள்ள நிலையில், அனைத்து கடைகள்,தொழிற்சாலைகள், உற்பத்தி ஆலைகள், ஷோரூம்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால் அத்தியாவசியம் தவிர அனைத்து ஆலைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் பிசிகல் தங்கத்தின் தேவையும் குறைந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. அதிலும் இன்று மட்டும் இதுவரை அவுன்ஸூக்கு 11.20 டாலர்கள் குறைந்து 1,642.90 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதே கடந்த வெள்ளிக்கிழமையன்று முடிவு விலையில் 1662.65 டாலராக முடிவடைந்த நிலையில், இன்று தொடக்கத்தில் 1662.55 டாலராக தொடங்கியது. இந்த நிலையில் தற்போது 1642.85 டாலராக வர்த்தகமாகி வருகிறது. 


 எம்சிஎக்ஸ் தங்கம் விலை
இந்திய கமாடிட்டி வர்த்தகத்தினை பொறுத்தவரையில் இரண்டாவது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது. தற்போது ஜூன் கான்டிராக்டில் 345 ரூபாய் வீழ்ச்சி கண்டு 43,200 ஆக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்த தங்கம் விலையானது வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையன்று சரிவில் முடிவடைந்திருந்தது. இந்த நிலையில் இன்றும் சரிவில் வர்த்தகமாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தேவை குறைவு என்றும் கூறப்படுகிறது. 


 

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை
இதே தங்கம் விலையை போலவே சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலையும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதிலும் இன்று தற்போது 3.36% வீழ்ச்சி கண்டு 14,055 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது. கடந்த முந்தைய சில சந்தை தினங்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் வர்த்தகமாகி வந்த நிலையில், இன்று 3% மேல் குறைந்து வர்த்தகமாகி வருகிறது. 


 
எம்சிஎக்ஸ் வெள்ளி விலை
சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் வெள்ளி விலையானது வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. குறிப்பாக தற்போது 1368 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 39,760 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. வெள்ளியின் விலையும் இரண்டாவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது. 


 

தங்க ஆபரணம் விலை
ஆபரண தங்கத்தின் விலையினை பொறுத்தவரையில் பெரியளவில் மாற்றம் ஏதும் இன்றி, சென்னையில் இன்று கிராமுக்கு 3,984 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே சவரனுக்கு 8 ரூபாய் அதிகரித்து 31,878 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளதால், கடந்த இரண்டு தினங்களாகவே பெரிதும் மாற்றம் இல்லாமல் தான் உள்ளது.
 

வெள்ளி ஆபரண விலை
தங்கத்தினைப் போலவே வெள்ளியின் விலையும் பெரியளவில் மாற்றமின்றி உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 39.52 ரூபாயாகவும், இதே கிலோ வெள்ளியின் விலையானது 10 ரூபாய் அதிகரித்து 39,520 ரூபாயாகவும் உள்ளது. வெள்ளியின் விலையும் கடந்த இரண்டு தினங்களாகவே பெரியளவில் மாற்றமின்றி உள்ளது.தேவை குறைவு
சர்வதேச அளவில் தங்கத்தின் தேவையானது வீழ்ச்சி கண்டு வரும் நிலையில், இந்தியா கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. அதிலும் சர்வதேச அளவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சந்தைகளும் பொருளாதாரம் வீழ்ச்சி காணலாம் என்ற நிலையில் மேலும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
 
பொருளாதார பேக்கேஜ்
அதோடு டாலரின் மதிப்பும் தங்கத்தின் தேவையினை குறைந்து வருகிறது. இதுதவிர உலகம் முழுக்க நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் தங்கம் தேவையானது குறைந்துள்ள நிலையில், விலையானது இன்று சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. இதனையடுத்து பல நாடுகளும் பொருளாதார சரிவிலிருந்து பாதுகாக்க, பாதுகாக்க 2 டிரில்லியன் டாலர் பொருளாதார பேக்கேஜினை அறிவித்துள்ளது. 

வீழ்ச்சிக்கு இது தான் காரணம்
இதே போல் இந்தியாவிலும் பொருளாதாரத்தினையும் மக்களையும் மீட்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தங்கம் விலையானது சற்று குறைந்து வருகிறது. இவ்வாறு பலவேறு காரணங்களுக்கு தங்கத்தின் விலையானது இன்று குறைந்துள்ளது. எனினும் கொரோனாவின் லாக்டவுனால் மக்களிடையே இது பெரும் தாக்கத்தின ஏற்படுத்தாது என்றாலும், கமாட்டி வர்த்தகத்தில் இது ஒரு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.