பார்வையாளர்களை அனுமதிக்காமல் ஐ.பி.எல். போட்டிகளை நடத்தலாம் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
வரும் 29 ஆம் தேதி தொடங்கி மே 24 ஆம் தேதி வரை 9 மாநிலங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.
கொரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகளை நடத்த மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இந்நிலையில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், விளையாட்டு அமைப்புகளுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்த அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக வரும்14 தேதி ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூடி, முக்கிய முடிவை எடுக்கவுள்ளது








