School Morning Prayer Activities - 09.03.2020 : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2024| HEALTH TIPS |TNTET 2024:

Home Top Ad

10,11,12 Public Exam Preparation March-2024

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


School Morning Prayer Activities - 09.03.2020 :

_20180701_211806

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.03.20

திருக்குறள்
அதிகாரம்:கல்வி
திருக்குறள்:400
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
விளக்கம்:
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
பழமொழி
A good horse  often wants a good  spur.
 சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்
இரண்டொழுக்க பண்புகள்
1. வெற்றி என்பது தற்காலிகம் எனவே எனது வெற்றியில் பெருமை கொள்ள மாட்டேன்.
2. தோல்வி எனக்கு பாடம் எனவே அதிலிருந்து நான் கற்றுக் கொள்வேன்.
பொன்மொழி
எந்தவொரு செயலையும் புரிந்து விருப்பத்துடன் செய்வதே சிறப்பு
அல்லாதனவெல்லாம்  நிறைவு தரும் என்பது நிச்சயமில்லை.
பொது அறிவு

1. இந்தியாவின் முதல் பெண் தாவரவியலாளர் யார்?

ஜானகி அம்மாள் கேரளம்

2. இந்தியாவின் முதல் பெண் விமானி யார்?

சரளா தாக்ரல்

*English words & meanings*

Lain - past participle of lie. Resting position. கிடத்தப்பட்ட.

Lane - a narrow road in the country. ஒடுக்கமான தெரு.

*ஆரோக்ய வாழ்வு*

உலர் திராட்சையில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்தது.

Some important  abbreviations for students

Pen - Power Enriched in Nib

etc.- End of Thinking Capacity

நீதிக்கதை

எறும்பின் தன்னம்பிக்கை

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.

அதாவது ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது என்று கூறினார். பின் அவர்களிடம், அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும் என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

திருப்தி - உளநிறைவு 
நஷ்டம் - இழப்பு             
நிபுணர் - வல்லுந‌ர்       
நீதி - நன்னெறி               
பூர்வம் - முந்திய

இன்றைய செய்திகள்

09.03.20

◆கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு மக்கள் பெருமளவு பயணங்களை தவிர்ப்பது நல்லது என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

◆10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட் மார்ச் 11-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

◆நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 48,154 கோடி டாலா் என்ற புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்துள்ளது.

◆சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று ஏர் இந்தியாவின் 8 வெளிநாட்டு விமானங்கள் உட்பட 52 விமானங்களை பெண்களே இயக்கியுள்ளார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

◆சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் நடத்தும் ஏ டிவிஷன் லீக் வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.

◆ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் அமித் பங்கால் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

Today's Headlines

🌸The Government of Tamil Nadu has emphasized that it is advisable for people to avoid large journeys in order to prevent the spread of coronavirus.

 🌸The Board of examination has announced that the hall ticket for the 10th public exam will be released on March 11.

🌸 The country's foreign exchange reserves hit a new historic height of 48,154 crore dollar

 🌸Air Officials said that women have operated 52 flights, including  8 overseas flights of Air India in order to honor the women on International Women's Day

 🌸The A Division League Volleyball Championships organized by the Chennai District Volleyball Association, began yesterday at the Mayor Radhakrishnan Ground in Egmore, Chennai.

🌸 India's Amit Pankal advanced to the quarter-finals of the qualifying round in Asian Olympic  Boxing.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Post Top Ad

Join our WhatsApp Channel

 


10,11,12 Public Exam Preparation May-2022

10th Model Question Paper 11th Model Question Paper 12th Model Question Paper
Tamil Tamil Tamil
English English English
Mathematics Mathematics Mathematics
Science Physics Physics
Social Science Chemistry Chemistry
10th Guide
Biology Biology
Second Revision Commerce Commerce
Mathematics all in one Accountancy Accountancy
Mathematics one Mark
Zoology
Slow Learners Materials

 


 


Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.




https://chat.whatsapp.com/KBEf9zAuA3xIPWi4Opqr6H