8 நாட்களாக தொடரும் "ரெக்கார்ட்".. 50% கொரோனா நோயாளிகளை குணப்படுத்திய தமிழகம்.. எப்போது மீளும்?
சென்னை: தமிழகம் கொரோனா நோயாளிகளை மிக
வேகமாக குணப்படுத்த தொடங்கி உள்ளது. இதுவரை தமிழகத்தில் மொத்தம் 50%
நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.
மே 3ம் தேதிக்கு தயாராக திட்டம்... திடீர்
அறிவிப்புக்கு என்ன காரணம்? தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 72
பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஒரே
நாளில் 52 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 452 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால்
உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் கொரோனாவில் இருந்து
விரைவில் மீளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தேகம் கொரோனா சந்தேகம் உள்ளவர்களை சோதனை
செய்வதில் தமிழகம் தினமும் ரெக்கார்ட் செய்கிறது. முதலில் 200-300 என்ற
எண்ணிக்கையில் கொரோனா சந்தேகம் உள்ளவர்கள் சோதனை செய்யப்பட்டார்கள். ஆனால்
தற்போது தினமும் 5000+ நபர்கள் சோதனை செய்யப்படுகிறார்கள். கடந்த 8
நாட்களாக எல்லா நாளும் 5000+ நபர்கள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டு
உள்ளனர். அதிக நபர்களுக்கு சோதனை தினமும் அதிக நபர்களை சோதனை செய்வதில்
தமிழகம்தான் முதல் இடம் வகிக்கிறது. தமிழகத்தில் இதுவரை 72,403 பேருக்கு
கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. நபர்கள் அடிப்படையில் பார்த்தால்
62834 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளது.
இன்று மட்டும் 6,426 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இன்று தமிழகம் 5000+ சோதனைகளை செய்து
ரெக்கார்ட் செய்துள்ளது. கோபித்து கொண்டு போன தம்பி… சார்வரி தமிழ் வருட
புத்தாண்டு பலன்கள்:… ஐசிஎம்ஆர் சோதனை மட்டும் இதில் கவனிக்க வேண்டும்
விஷயம் தமிழகத்தில் ஐசிஎம்ஆர் சோதனை மட்டுமே செய்யப்படுகிறது. மிக கடினமான
இந்த சோதனை மூலமே இத்தனை பேருக்கு ஒரே நாளில் சோதனை செய்கிறார்கள்.
தமிழகத்திற்கு வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் சரியாக செயல்படவில்லை.
அதனால் அதை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி உள்ளனர். 30+ ஐசிஎம்ஆர்
சோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளது.
வேகமாக குணப்படுத்துகிறது அதே சமயம் தமிழகம்
கொரோனா நோயாளிகளை மிக வேகமாக குணப்படுத்த தொடங்கி உள்ளது. இதுவரை
தமிழகத்தில் மொத்தம் 50% நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஆம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,755 ஆக
உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 866 பேர் குணமடைந்து உள்ளனர். 22 பேர்
பலியாகி உள்ளனர். 864 பேர் தான் இன்னும் சிகிச்சை பெற்று வரும் ஆக்ட்டிவ்
கேஸ்கள். சர்ச், மசூதியை சொல்லுங்களேன்.… நிர்வாணமாக வலம் வந்த 6 கொரோனா…
தமிழகத்தில் பாதி பேர் குணமடைந்து உள்ளனர் இதனால் தமிழகத்தில் கொரோனாவால்
பாதிக்கப்பட்ட பாதி பேர் குணமடைந்து உள்ளனர்.
இன்று மட்டும் 114 பேர் தமிழகத்தில்
குணப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமாக கோவை இஎஸ்ஐ
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 36 பேர் ஒரே நாளில் குணப்படுத்தப்பட்டு
உள்ளனர். இங்குதான் அதிகமாக மொத்தம் 171 பேர் குணப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகம் விரைவில் மீளும் தமிழகம் கொரோனாவில் இருந்து விரைவில் மீளும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக சராசரியாக தினமும்
45 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் சராசரியாக 80 பேர்
கொரோனாவில் இருந்து குணப்படுத்தப்படுகிறார்கள். இதனால் இன்னும் 20
நாட்களில் தமிழகத்தில் இருந்து பெரும்பாலும் கொரோனா குணப்படுத்தப்பட
வாய்ப்புள்ளது. புதிதாக எங்கும் எபிசெண்டர் உருவாகாமல் இருந்தால் விரைவில்
தமிழகத்திற்கு நல்ல செய்தி கிடைக்கும்.