
வெயில் காலத்திலும் முகம் பொலிவுடன் இருக்க
சில எளிய முறைகளை பின்பற்றலாமே..
ஒரு ஸ்பூன் பாசி பருப்பு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சைசாறு கலந்து
முகத்தில் தேய்த்து விடுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில்
கழுவி வர சருமத்தையும், அழகையும் தரும்.
1 ஸ்பூன் பாசிப்பருப்பு பொடியை எடுத்து அதனை ஆலிவ் எண்ணெயுடன் குழைத்து தினமும் முகத்தில் தடவி கொள்ளுங்கள்.
இதை 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இதை தொடர்ந்து செய்யும்
போது, வயது அதிகமாக அதிகமாக சருமத்தில் ஏற்படும் மேடு பள்ளம் போன்ற அமைப்பு
நீங்கும்.
பாசிப்பருப்பு, கசகசா, பிஸ்தா, ரோஜா மொட்டு இவற்றை நன்றாக காயவைத்து,
பொடி செய்து இந்த பவுடரை சிறிதளவு பாலுடன் சேர்த்து முகத்தில் பூசி 25
நிமிடங்கள் கழித்த பிறகு கழுவினால் முகத்தின் கருந்திட்டுகள் காணாமல்
போகும்.