
இதுகுறித்து சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செந்தில்குமார், மாவட்டத் தலைவர் அர்ச்சுணன், பொருளார் ரவிச்சந்திரன், செயலர் வெங்கடாஜலபதி ஆகியோர் பள்ளி திறப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழு தலைவருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. துரித நடவடிக்கை மேற் கொண்டு தடுப்பு நடவடிக்கை செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு சங்கத்தின் சார்பில் நன்றியும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.