நான் 30.4.2020-ல் பணியிலி ருந்து ஓய்வு பெற வேண்டும். எனக்கு 31.5.2020 வரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்நிலை யில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ல் இருந்து 59 வரை உயர்த்தி தமிழக அரசு 7.5.2020-ல் ஆணை பிறப்பித்தது.
ஏப்.30-ல் ஓய்வுபெற்ற ஆசிரியருக்கும் வயது நீட்டிப்பு சலுகை கிடைக்குமா?- அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.
சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் டி.ஜெயமங்கலம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்த அரசாணையால் 31.5.2020-ல் வழக்கமாக ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பயன்பெறுவர். என்னைப் போல் ஏப்ரல் 30-ல் ஓய்வு பெற்று பணி நீட்டிப்புப் பெற்றோருக்குப் பலனில்லை. இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.
எனவே 31.5.2020-ல் ஓய்வு பெறும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்தும் அரசாணையை ரத்து செய்து 30.4.2020-ல் ஓய்வு பெற்றோருக்கும் ஓய்வு வயது நீட்டிப்புச் சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை என்னை (மே 31) பணியிலிருந்து விடுவிக்கத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.