அதுஒரு பண்ணையார் வீடு, அந்த வீட்டில் வசித்து வந்த ஒரு எலியானது , தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.
அது தனது வளையை விட்டு தலையை உயர்த்தி பார்த்தபோது , பண்ணையாரும் , அவரின் மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்...
ஏதோ, தான் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று எண்ணி ஆவலோடு அதையே உற்று பார்த்தது எலி...
ஆனால் , அவர்கள் அந்த பார்சலிலிருந்து வெளியே எடுத்தததோ ஒரு எலிப்பொறி !!
அதைப் பார்த்ததும், அந்த எலிக்கு ஒரு கணம் மூச்சே நின்று விடும் போல இருந்தது...!அது தனது வளையை விட்டு தலையை உயர்த்தி பார்த்தபோது , பண்ணையாரும் , அவரின் மனைவியும் ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்...
ஏதோ, தான் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று எண்ணி ஆவலோடு அதையே உற்று பார்த்தது எலி...
ஆனால் , அவர்கள் அந்த பார்சலிலிருந்து வெளியே எடுத்தததோ ஒரு எலிப்பொறி !!
உடனே ஒரே ஓட்டமாக ஓடி அந்த வீட்டில் இருந்த கோழியிடம் போய் ,
".உனக்கு தெரியுமா? பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார்.... எனக்கு பயமாக இருக்கிறது ! ."
என்றது ...
உடனே கோழி , கிண்டலுடன் ,
" ஐய்யே... இது உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்....! நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."
திமிராக சொன்னது கோழி :
உடனே எலி , பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்ல...
வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு....
" எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே எனக்கு கிடையாது ."
என்றது அலட்சியத்துடன் :
அந்த வார்த்தைகள் கேட்டு மனம் நொந்த எலி , அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்ல.....
அதுவும், அதே பதிலைச் சொல்லி விட்டு பின் , எகத்தாளமாக ,
". சரி தான்... எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?"
என்று கேலி செய்தது.
இரவு நேரமும் வந்தது ;
அந்த எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு , பண்ணையாரும் அவர் மனைவியும் உறங்க சென்ற அக்கணம் ....
" டமால் "
என்றொரு சத்தம் !
.
'ஆஹா எலி மாட்டிக்கொண்டுவிட்டது '
என்று மனதில் எண்ணியவாறே, பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.
என்ன ஒரு ஆச்சரியம் ! அங்கே எலிக்கு பதிலாக ஒரு பாம்பு !
பொறியில் பாதி மாட்டியும் , மாட்டாமலுமாய் பொறியில் சிக்கியிருந்த அது , கோபத்துடன் எஜமானியம்மாளை பார்த்ததும், அவளை கடித்து விட...
அடுத்த கணம் , அந்த வீடே அமர்க்களப்பட்டது !
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்...
விஷம் உடல் முழுவதும் பரவ.... உடன் பயமும் சேர்ந்து கொள்ள ..
அந்த எஜமானியம்மாளுக்கு ஜுரம் வந்து விட்டது !...
விஷத்தை முறிக்க , ஊசி போட்ட பின்னரும் , அந்த அம்மாளுக்கு ஜுரம் இறங்கவேயில்லை...
உடனே, அருகில் இருந்த ஒரு மூதாட்டி ,
" பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது"
என்று யோசனை சொன்னாள்.
ஹூம் ...
இப்போது கோழிக்கு வந்தது வினை.!
அந்த கோழியை அடித்து சூப் வைத்தத்தில், அது உயிரை விட்டது !
அப்போதும் அந்த அம்மாளுக்கு ஜுரம் தணியாததால் , அந்த அம்மாளை பார்க்கும் நோக்குடன்... கவலை தோய்ந்த முகத்துடன்... கூட்டம் கூட்டமாய் விருந்தினர்கள் அங்கே முகாமிட...
அவர்களுக்கு உணவு அளிக்கும் அளிக்கும் பொருட்டு, அந்த வான்கோழியை அடிக்க ...
பாவம் அதுவும் உயிரை விட்டது....
சில நாட்களில் , எஜமானியம்மாளின் உடல் நன்றாக தேறி, அவள் பூரண குணம் அடைந்து விட .....
அவள் பிழைத்ததை கொண்டாடும் வகையில், அந்த பண்ணையார் ஊருக்கே விருந்து வைத்தார்....!
இந்த முறை பலியானது ஆடு !..
நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது...
ஒரு கட்டத்தில், அந்த பண்ணையார் , தன் மனைவியின் பாம்புக்கடிக்கு இந்த எலிப்பொறி தானே காரணம் என்று கருதி , அதை தூக்கிப் பரணில் போட்டு விட்டார்....!
இப்போது எலி தப்பித்து விட்டது !!
நீதி :- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள்....
ஏனென்றால் , யாருக்கு, என்ன பிரச்சினை, எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.....