
பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு 600
நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகை ரூ. 2399 விலையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சலுகை அந்நிறுவனத்தின் சட்டீஸ்கர் வட்டாரத்திற்கான அதிகாரப்பூர்வ
ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த
சலுகையில் தினமும் 250 நிமிடங்கள் வாய்ஸ் கால், முதல் 60 நாட்களுக்கு இலவச
பிஎஸ்என்எல் டியூன்ஸ் சேவை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும்
100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் டேட்டா வழங்கப்படவில்லை.
இந்த சலுகை நாடு முழுக்க அனைத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கும்
அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர
பிஎஸ்என்எல் ரூ. 699 சலுகை சென்னை மற்றும் தமிழ் நாடு வட்டாரத்திற்கு
வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 0.5 ஜிபி
டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், பிரத்யேக ரிங்
பேக் டோன் உள்ளிட்டவை 160 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்
ரூ. 699 சலுகையில் அறிவிக்கப்பட்டுள்ள வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்
போன்ற பலன்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் மற்றும் வாய்ஸ் கால்
தினமும் 250 நிமிடங்கள் வரை வழங்கப்படுகிறது.