*_எலுமிச்சை பழம்_* 🍋
🍋எலுமிச்சை - எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.
🍋எலி
மிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.
🍋எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.
எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.
🍋இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.
🍋இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.
🍋100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.
🍋எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.
🍋வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.
🍋எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.
🍋கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.
🍋பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.
🍋சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.
🍋பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.
🍋தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.
🍋பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.
🍋உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.
🍋இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.
🍋மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.
🍋இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.
🍋காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.
🍋சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.
🍋தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.
🍋சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.
🍋இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.
🍋தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.
🍋தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.
🍋நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.
🍋மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.
🍋கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.
🍋எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.
🍋அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.
🍋நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.
🍋எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.
🍋சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.
🍋எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.
🍋சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.
🍋சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.
🍋ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.
🍋முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.
🍋எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.
🍋எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.
🍋இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.
🍋உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.
🍋வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.
🍋சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.
🍋கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.
🍋எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.
🍋எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.
🍋இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல..
🥛 *_பால்_காய்ச்சும்_போது_சத்துக்களை அழித்துவிடாமல்_பாலை_எப்படி காய்சணும்னு..❗❗❗உங்களுக்கு_தெரியுமா…❓❓❓_*
❤ இல்லத்தரசிங்களே உங்களுக்கு பால் காய்ச்ச தெரியுமானு யாராவது கேட்டா இது என்ன கேள்வி❓
❤ பால் கூடவா காய்ச்சத் தெரியாது❓
❤ அது என்ன பெரிய விஷயமா❓
என்று சாதாரணமாகக் கேட்பார்கள். அப்படி கேட்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா தோழிகளே.
❌ பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம்.
❌ காய்ச்சிய பாலை, 2 - 3 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.
❌ கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண்தான்.
❌ பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
👌 இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின்தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.
💚பாலைக் காய்ச்சியதும் குடித்து விடவேண்டும்.
❌ பாலை ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும்.
❌ பொதுவாக, எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சுடவைக்க வேண்டாம்.
💚 ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிட்ஜில் வைக்கலாம். காபி, டீ எனத் தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்துத் தயார் செய்யலாம்.
இனியாவது பால் காய்ச்சும் போது சத்துக்களை அழித்துவிடாமல் ஒழுங்காக பால் காய்ச்சலாம் தோழிகளே.
*_மோர்/ நீர்மோர் ( Buttermilk )_*
~தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.
எத்தனைதான் கலர்க்கலரான குளிர்பானங்கள் மார்கெட்டில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா?
வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும்.
கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா? மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது.
நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது. எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், திருவிழா நேரங்களில் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள்.
இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும். அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும்.
*மோர் தயாரிக்க..*
#தேவையானபொருட்கள்:
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு
#செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
#குறிப்பு:
வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
*_தலை_சுற்றல்..._*
ஆணுக்கும், பெண்ணுக்கும் அடிக்கடி ஏற்படும் நோய்களில் ஒன்று.
இது ஏன் ஏற்படுகிறது?
இதன் பாதிப்பு என்னவாக இருக்கும்?
என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. ஆனால் தன்னை சுற்றியுள்ள பொருட்கள் எல்லாம் ஒரு சக்கரம் போல் சுழல்வதாக உணர்வார்கள்.
வாந்தி வருவது போல இருக்கும். நடப்பதிலும் தள்ளாட்டம் காணப்படும். நிற்பதிலும் சிரமமாக இருக்கும்.
இதனை மருத்துவத்தில் வெர்டிக்கோ என்று கூறுவார்கள். வெர்டிக்கோவில் வெர்டோ என்ற சொல் லத்தீன் மொழியாகும். இதற்கு கிறக்கம் என்று பொருள். சுற்றுவது, சுழல்வது என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
இந்நோய் பாதித்தவர்கள் முதலில் தன்னை சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதாக கூறுவர். இரண்டாவது நிலையில் தானே சுற்றுவதாகவும், தன்னோடு தலையும் சேர்ந்து சுழல்வதாக தெரிவிப்பர். இந்நோய் சுமார் 20 முதல் 30 சதவீதம் மக்களை பாதித்துள்ளது. அனைத்து வயது ஆண்களும், பெண்களும் இந்நோய்க்கு ஆளாகி உள்ளனர். ஆண்களை விட பெண்களுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
காது, நரம்பியல் பிரச்சினைகளாலும், காக்காய் வலிப்பு நோயாலும், அதிக மதுபானம் அருந்துவதாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்படலாம். உள்காது நரம்பு மண்டலத்தால் வரும் தலைசுற்றலை பெரிபெரல் வெர்டிகோ என்று கூறுவார்கள்.
மனிதனின் உள்காதில் வட்டவடிவத்தில் கால்வாய் போன்ற பாதைகள் உள்ளன. இது சிறு குகைப்போல காணப்படும். இங்கிருந்து 8-வது நரம்பு வருகிறது. இதில் ஏற்படும் அழுத்தத்தின் காரணமாக வரும் தலைசுற்றல் தான் பெரிபெரல் தலைசுற்று என்று அழைக்கப்படுகிறது.
மிக கடுமையான ஜலதோஷத்தில் இருந்து விடுபட்டவருக்கு இந்த தலைசுற்றல் வரலாம். சில மருந்துகள் காரணமாகவும் தலைசுற்றல் வர வாய்ப்பு உள்ளது. தலையில் அடிபடுவது, பிரயாணம் போன்றவற்றாலும் தலைசுற்றல் வரலாம். அப்போது காதில் கேட்கும் திறன் குறைந்தது போல இருக்கும். வாந்தியும், வலியும் ஏற்படும். முகத்திலும் பலவீனம் தெரியும்.
இது போல நரம்பு மண்டலத்தில் சிறுமூளை பாதிக்கப்படுவதாலும் தலைசுற்றல் வரும். இவ்வாறு தலைசுற்றல் வருபவர்களுக்கு பேச்சு குழறும், எதிரில் உள்ள பொருட்கள் இரண்டு இரண்டாக தெரியும். கண் அசைதல், நேர் கோட்டில் நடப்பதில் சிரமம், ஒரே இடத்தில் நிற்கவும் முடியாத நிலை போன்றவை ஏற்படும். பக்கவாதம், மூளைக்கு செல்லும் ரத்தஓட்டகுறைவு, மூளையில் கட்டிகள், ரத்த கசிவு, கழுத்தெலும்பு கட்டிகள், தண்டுவட நோய்கள், கழுத்தெலும்பு தேய்மானம் போன்றவற்றாலும் தலைசுற்றல் ஏற்படும். இதனை குணப்படுத்த நவீன மருத்துவத்தில் பல மருந்துகள் வந்துள்ளன.
ஆயுர்வேதத்தில் வாத, பித்தங்களை சார்ந்து இந்நோய் வருவதாக நம்பப்படுகிறது. உடலில் காது தான் வாதத்தின் இருப்பிடமாகும். இங்கு வாத பித்தம் அதிகரிக்கும் போது தலைசுற்றல் ஏற்படுகிறது. வாத பித்தத்தை தணிக்கும் இனிப்பு குணமுடைய, நெய்ப்பு தன்மை கொண்ட மருந்துகளை உட்கொண்டால் நோய் குணமாகும்.
படுக்கையில் இருந்து எழும்போது கழுத்தை திடீரென்று திருப்பாமல் மெதுவாக அசைத்து திருப்ப வேண்டும். நடக்கும் போது மெதுவாக நடக்க வேண்டும்.
பித்தம் அதிகரிப்பதால் ஏற்படும் தலைசுற்றலால் வாயில் கசப்பு அல்லது புளிப்பு ருசியும், புளித்த ஏப்பமும், வயிற்று உப்புசமும் ஏற்படலாம். கண்கள், உள்ளங்கை, கால்களில் எரிச்சல் ஏற்படும். தூக்கமும் சரியாக வராது. இந்த வகை தலைசுற்றலுக்கு கருமிளகு அல்லது வெள்ளை மிளகு அல்லது வெந்தயத்தை பாலில் அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி சட்டியில் போட்டு வதக்கவும். நன்கு வதங்கிய பின் அதனுடன் கொஞ்சம் தேன் சேர்த்து மேலும் வதக்கி கொஞ்சம் தண்ணீரையும் சேர்த்து சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி அதனுடன் கற்கண்டு சேர்த்து ஒரு அவுன்ஸ் வீதம் தினமும் 2 லிருந்து 3 வேளை குடித்து வந்தால் தலைச்சுற்றல் குறையும். அஜீரணத்தால் வரும் தலைச் சுற்லுக்கு சுக்கு, மல்லிவிதை, சீரகம் போட்டுக் காய்ச்சிய சுடுநீரைக் குடிப்பது நல்லது.
*தலைசுற்றல், மயக்கம் வீட்டு மருந்துகள் :*
கசகசா, கொத்தமல்லி, பருத்தி விதை ஆகியவற்றை நன்றாக இடித்து பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படுவது குறையும்.
வெங்காய சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட, காது இரைச்சல் குறையும்.
சுக்கு, மிளகு, திப்பிலி, லவங்கபட்டை, சதகுப்பை, காயம், அதிவிடயம் ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு நல்லெண்ணையும் காடியையும் அதனுடன் சேர்த்து காய்ச்சி அந்த எண்ணெயை காதில் சில துளிகள் விட்டு வந்தால் காது இரைச்சல் நீங்கும்.
நெல்லிவற்றல், சந்தனத்தூள், மல்லி விதை மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைசுற்றல், கிறுகிறுப்பு குறையும்.
நெல்லிவற்றல், சந்தனத்தூள், மல்லி விதை மூன்றையும் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வந்தால் தலைசுற்றல், கிறுகிறுப்பு குறையும். மல்லி விதை 5 கிராம், உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகள் 5 கிராம் ஆகிறவற்றை இரவில் ஊற வைத்து காலையில் வடிகட்டி சர்க்கரை சேர்த்து பருக வேண்டும். கொத்தமல்லி சாறும் நல்லது. இதனுடன் தேன் அல்லது மோர் கலந்து குடிக்கலாம். எலுமிச்சை சாறும் நல்ல மருந்தாகும்.
தலைசுற்றலை போக்கும் இஞ்சி வடகம்
பால்முதப்பன் கிழங்கால் காய்ச்சப்பட்ட விதார்யாதி கசாயம் தலைசுற்றலுக்கு சிறந்த மருந்தாகும். திராட்சாதி குடிநீர், நன்னாரி, வெண்தாமரை குடிநீர் போன்றவையும் சிறந்த மருந்தாகும். பேரீச்சை லேகியம், நன்னாரி மணப்பாகு ஆகியவற்றை காலையிலும் மாலையிலும் ஒரு ஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.
முசு முசுக்கை கசாயத்தில் இஞ்சி வடகத்தை சேர்த்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட தலை சுற்றலும் தீரும்.
இஞ்சி லேகியம், சீரக சூரணம் இதற்கு சிறந்த மருந்தாகும். மல்லி சூரணமும் பயன்படுத்துவார்கள். வாதபித்தத்தை தணிக்கிற தைலங்களான அதிமதுரத் தைலம், வாதாசின் தைலம், நாராயண தைலம், கீழா நெல்லி தைலம், சீரக தைலம் போன்ற தைலங்களை தலைக்கு தேய்த்து குளிக்கலாம். ஆறு காலாதி தைலமும் தலைக்கு நல்லது.
வெண்தாமரை பால் கசாயம் மிகவும் சிறந்தது. இரவு உறங்கும் முன் சாரஸ்வதகிருதம், வாணி கிருதம், கல்யாணக கிருதம், மகாதிக்தக கிருதம், நெல்லிக்காய் கிருதம், சந்தனாதி கிருதம் போன்ற கிருதங்களை சேர்த்து சாப்பிடலாம். மூக்கின் வழியாக மருந்துகளை செலுத்துகிற நஸ்யம் சிகிச்சை மூலமும் இதற்கு நிவாரணம் கிடைக்கும். வில்வ இலைகளை மென்று சாப்பிட்டாலும் தலைச்சுற்றல் குறையும்.
*_தேன்:-_* 🍯
~தேனீக்கள் பூக்களிலுள்ள அமிர்தத்தைப் பருகி தம் உடலிலுள்ள தேன்பைகளில் சேமிக்கின்றன. இந்த அமிர்தம் ஒருவித மாறுதலை அடைந்த பிறகு தேன் உண்டாகிறது.
புதிய தேன் தெளிவாகாவும், இளமஞ்சள் நிறமாகவும், இனிப்புச் சுவையுடனும் இருக்கும்.
தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தாகும். இது எளிதில் கெட்டுப்போகாத பொருள். 45 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். எனவே இது விரைவில் உடலில் சேர்ந்து பலத்தை தருகிறது.
இது நல்ல மலமிளக்கியாகவும் (laxative), கோழையகற்றியாகவும் (expectorant), பசி தூண்டியாகவும் மற்றும் நல்ல தூக்கத்தை கொடுக்கும் ஆற்றல் உடையது.
தேனில் வைட்டமின் B2, B6, K, சிட்ரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்கானீசியம், குளோரின், அயோடின் குளுக்கோஸ் ஆகிய சத்துக்கள் உள்ளன.
200 கிராம் தேனில் ஒன்றரை லிட்டர் பால் மற்றும் ஒன்றரை கிலோகிராம் மாமிசம் இவைகளிலுள்ள சத்துப்பொருட்களுக்கு இணையான சத்துப் பொருட்கள் உள்ளன!
தேனில் கலப்படம் அறிய:
* ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விட, தேன் கரையாமல் அடியில் சென்றால் சுத்தமான தேனாகும்.
* ஒரு செய்தித்தாளை எடுத்து, அதில் ஒரு சொட்டு தேனை விட, பினபக்கம் கசியாமல் இருந்தால் அது சுத்தமான தேன்.
* ஒரு துளி தேனை நாவில் தடவினால், இனிப்புச்சுவை நீண்ட நேரம் நாவில் இருக்கக்கூடாது மற்றும் நாவில் மஞ்சள் நிறம் தோன்றக்கூடாது.
* சுத்தமான தேனை எறும்புகள் அண்டாது.
மருத்துவ பயன்கள்:
குடல்புண்ணை ஆற்றும் தன்னையுடையது, நல்ல பசி உண்டாகும், தீப்பட்ட காயங்களுக்கு தேன் சிறந்த மருந்தாகும்.
வயிறு வீக்கத்தால், அதன் மீது தேனைத் தேய்த்து வர வலி குறைந்து வீக்கம் குறையும்.
முகத்தில் கரும்புள்ளிகளுள்ள இடத்தில் தேனை தடவி வெந்நீரால் கழுவ நல்ல முக வசீகரம் உண்டாகும்.
ஆஸ்துமா நோயுள்ளவர்கள், அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சம அளவு தேன் மற்றும் இஞ்சிசாறு கலந்து உண்ணலாம்.
குழந்தைகளுக்கு இரவு தூங்கும் முன்பு 1 தேக்கரண்டி தேன் கொடுக்க, தூக்கத்தை தூண்டும் மருந்தாக செயல்படுகிறது.
குறிப்பு:
தேனை சூடாண உணவுப் பொருட்களுடன் கலக்கக்கூடாது.
தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.
தேனும் நெய்யும் சம அளவில் கலந்து அருந்தக்கூடாது.
இயற்கை (இறைவன்) படைத்த இத்தகைய அரிய மருத்துவ குணங்கள் வாய்ந்த தேனை நாமும் அன்றாடம் பயன்படுத்தி நலம் பெறலாமே!*_எலுமிச்சை பழம்_* 🍋

அருந்தக்கூடாது
தேனை சூடாக்குவதை தவிர்க்க வேண்டும்.
தேனும் நெய்யும் சம அளவில் கலந்து .
இயற்கை (இறைவன்) படைத்த இத்தகைய அரிய மருத்துவ குணங்கள் வாய்ந்த தேனை நாமும் அன்றாடம் பயன்படுத்தி நலம் பெறலாமே!