வால்பாறையில், விடைத்தாள் திருத்த ஆசிரியர்களை,
பேருந்துகளுக்கு பழுதுநீக்கும் வாகனத்தில் அழைத்துச் சென்ற சம்பவம்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையிலிருந்து பொள்ளாச்சிக்கு விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதி இல்லாவிடில், கார் ஏற்பாடு செய்யப்படுமென கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், வால்பாறையில் இன்று விடைத்தாள் திருத்தும் பணிக்கு காரோ... அரசுப் பேருந்தோகூட வரவில்லை.

அரசுப் பேருந்துகளைப் பழுதுநீக்க, பழைய பேருந்து மாடலில் இருக்கும்
வாகனம்தான் அவர்களுக்கு வந்தது. 15 ஆசிரியர்களில் இன்று முதல்கட்டமாக 3
ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்குப் புறப்பட்டனர். அந்த
வாகனத்தில் ஆசிரியர்கள் மிகவும் சிரமப்பட்டே ஏறினர். இந்த விஷயம்
ஆசிரியர்கள் வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது