இந்த வரைவு அறிக்கை தொடர்பாக கடந்தாண்டு ஜூலை 31ம் தேதி வரை கருத்துகளை தெரிவிக்க மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அவகாசம் அளித்தது. இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்து கேட்பு கூட்டம் நாட்டில் பல இடங்களில் ரகசியமாக நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே, நாடு முழுதும் சுமார் 2 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை அனுப்பி உள்ளனர். இதனையடுத்து மாநில கல்வி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தற்போது, அனதை்து
கருத்துகளையும் ஆய்வு செய்து இறுதி வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் மோடி புதிய கல்விக்கொள்ளை இறுதி அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், விரைவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவர்களுடனான ஆன்லைன் உரையாடலில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், வரும் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவப்படிக்கான நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார். JEE தேர்வுகள் ஜூலை 18 முதல் ஜூலை 23 வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.