கொரோனா வைரஸூக்கு எதிராக போராடும் போராளிகளுக்காக இசைஞானி இளையராஜா பாடல் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரபலங்கள் பலரும்
கருத்துக் கூறி வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வு பாடலாக இளையராஜா மற்றும்
ஏஆர் ரஹ்மான் இசையமைத்த பாடல்களின் மெட்டிலேயே பல பாடல்கள் வெளி
வந்துள்ளன. அண்மையில் கூட வைரமுத்து வரிகளில் எஸ்பி பாலசுப்பிரமணியம்
ஒருவன் ஒருவன் முதலாளி பாடல் மெட்டில் பாடியிருந்தார். அந்தப் பாடல் பெரும்
வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இசைஞானி இளையராஜா கொரோனாவை எதிர்த்து போராடும் போராளிகளுக்கு
மரியாதை செலுத்தும் வகையில் ஒரு பாடலை எழுதி இசையமைத்துள்ளார். அந்தப்
பாடலை பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். பாரத
பூமி.. ஒரு புண்ணிய பூமி.. என்று தொடங்கும் இந்த மெலோடி பாடல் சமூக
வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலில் லிடியன் நாதஸ்வரம் கீபோர்டு
வாசித்துள்ளார்.
CLICK HERE TO WATCH THE SONG