ஜூன் 15 இல் கொரோனா வைரஸ் கொடும் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கு 10 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறைகூவல் விடுத்துள்ளதா?
📢📢📢📢📢📢📢📢📢
பெற்றோர்கள், கல்வியாளர்கள், பொது நோக்கர்கள், அனைத்து அரசியல் கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள் என அனைவரும் சென்னையில் கொரோனா வைரஸ் பரவுதல் தீவிரமாக இருக்கிறபோது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியினை மாற்றி வைத்து அறிவித்திட பள்ளிக் கல்வித் துறையிடம் எவ்வளவோ மன்றாடி பார்த்தும் செவிசாய்க்கவில்லை. திட்டமிட்டபடி ஜூன் 15 முதல் 25 ஆம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றே தீரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சூளுரைத்து வருகிறார். தேர்வு எழுதுவதற்கான அனுமதிச் சீட்டு இணைய வழியாக வழங்கிட தொடங்கிவிட்டார்கள். ஜூன் 8-ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள், மாணவர்கள் எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும் அவரவர்கள் இருப்பிடத்திற்கு வந்து சேரவேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டு விட்டது. 8ஆம் தேதிக்கு பிறகு வரும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள். ஒழுங்கு நடவடிக்கையும் அவர்கள் மீது எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் கொரோனா தொற்று வராது என்ற உறுதிமொழியை பள்ளிக்கல்வித்துறை அளிக்க முன்வருமா? மார்ச் 24 அன்று சட்டமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு கொரோனா வராது என்று சொன்ன உறுதிமொழியே நிலைத்து நிற்கவில்லை. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தை நாம் தக்க வைத்துக் கொண்டு முன்னேறி வருகிறோம். மார்ச் 23 அன்று நாடாளுமன்றத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் இந்தியா அதை கட்டுக்குள் வைத்திருக்கும் என உறுதி அளித்தார்கள். ஆனால் இத்தாலி, ஸ்பெயினையே பின்னுக்குத் தள்ளி பாதிப்பில் உலக அளவில் 5வது இடத்திற்கு முன்னேறி வருகிறது.

சென்னையில் கொரோனா வைரஸ் தீ நாளுக்கு நாள் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், இரவு பகல் பாராது காவல் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள், அடிப்படை பணியாளர்கள் உட்பட சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருவதை பள்ளிக்கல்வித்துறை அன்றாடம் கண்டு வருகிறது. மாணவச் செல்வங்களை, பற்றி எரியும் தீயில் களம் காணச் சொல்வதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு எப்படி மனம் துணிகிறது. வசதிவாய்ப்புள்ள மேட்டுக்குடி மக்களேயானாலும் சென்னையில் வாழ்ந்து வருபவர்கள் அவர்கள் பெற்ற பிள்ளைகள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் எண்ணுகிறார்கள். மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய குடிசையில் வாழும் பெற்றோர்களும் இதை எண்ணிதான் கவலைப்பட்டு வருகிறார்கள். அந்த காலத்தில் வீட்டில் 4 அல்லது 5 பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் இந்த காலத்தில் வீட்டிற்கு ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகள் மட்டும் தான் இருக்கிறார்கள். எவரின் குழந்தைகளைப் பற்றியும் பள்ளிக்கல்வித்துறைக்கு கவலையில்லை. ஆனால் பெற்றவர்களுக்கு அந்த கவலை உள்ளதே!!....
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் இதயமும், டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் இதயமும் பள்ளிக்கல்வித்துறையிடம் இடம்பெறாமல் போனது ஏன்?
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் தன்னை முதலமைச்சர் என்று அழைப்பதை காட்டிலும் வயலில் நாற்று நட்டு வரும் பெண்களும், அன்றாடம் கூலித்தொழில் செய்து வரும் தொழிலாளர்களும் நம்ம எம்ஜிஆர் என்று அழைப்பதையே வாழ்நாளின் கடைசி மூச்சு இருக்கும் வரை லட்சியமாகக் கொண்டிருந்தார். மறைந்த முதலமைச்சர் டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடம் பேச்சில், அணுகுமுறையில்,தோற்ற உயர்வு இருந்ததே தவிர அடித்தட்டு மக்களிடம் எம்ஜிஆர் அவர்களைப் போலவே பேரன்பு கொண்டிருந்தார். (உங்களால் நான் உங்களுக்காக நான்) என்ற அவரின் குரல் இன்றும் அடித்தட்டு மக்கள் மத்தியில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களோ தனியார் கல்வி நிறுவனங்களுக்காகவும், மேட்டுக்குடி மக்களின் பிள்ளைகளுக்காகவும் நாங்கள் செயல்படவில்லை என எம்ஜிஆர் அவர்கள் மீதும், ஜெயலலிதா அவர்கள் மீதும் சத்தியம் செய்து சொல்ல முன் வருவாரா? ஆசிரியர்கள்-மாணவர்கள் உறவு தாய்-சேய் உறவுக்கு இணையானதாகும். அதனால்தான் ஆசிரியர்கள் பெற்றோர்களைப் போல் பிள்ளைகள் மீது அக்கறை காட்டுகிறார்கள். 10 லட்சம் மாணவர்கள் ஒரே சமயத்தில் களத்தில் இறங்கி தேர்வு எழுதுகிற போது நோய்த்தொற்று வராது என்பதற்கு என்ன உறுதி உள்ளது. குறிப்பாக சென்னையில் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் இதயக் குலைகள் நடுங்க தேர்வு எழுதச் செல்வார்கள். பெற்றோர்களும் அவரவர்கள் குல தெய்வத்தை வேண்டி பிள்ளைகளை அனுப்பி வைப்பார்கள். கொரோனா வைரஸை பொருத்தவரையில் சாதி மத பேதங்களை பார்ப்பதில்லை. இளையவர்கள், வயது முதிர்ந்தவர்கள் என்று முகம் பார்ப்பதில்லை. நேற்று வரையில் 1524 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னையிலும், மாநிலம் முழுவதும் தேர்வு எழுதுகின்ற மாணவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்படுமேயானால் இந்த அரசின் மீது மக்களின் கோபம் கொரோனா தீயாக பற்றி எரியும் என்பதை பள்ளிக்கல்வித் துறை உணர வேண்டும். கண்காணிப்பில் ஈடுபடப் போகும் ஆசிரியர்கள் உயிரின் மீதும் எங்களுக்கு அக்கறை உண்டு. பார்வையிட சென்று வரும் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரின் உயிரின் மீதும் எங்களுக்கு அக்கறை உண்டு. அந்த அக்கறை தமிழக அரசுக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கும் ஏற்பட வேண்டும் என நாடே பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
மறைந்த முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் இதயமும், மறைந்த முதலமைச்சர் அம்மா டாக்டர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் இதயமும், கனிவும் இவர்களிடம் எதிரொலிக்கட்டும். மக்களின் நலனுக்காக அவரவர்களின் இயல்பான பிடிவாதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு பொது நோக்கோடு செயல்பட வேண்டும் என்பது பொது நியதி ஆகும்.
மாணவர்கள் உயிர்ப் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ள பெற்றோர்களின் பிரதிபலிப்பே இந்த பதிவாகும்.
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.