இது ஒரு புறம் இருக்க மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பொதுத்தேர்வு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.அதே வேளையில்,10ம் வகுப்பு பொதுத் தேர்வை தள்ளிவைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்த தமிழக அரசு அவசரம் காட்டுவது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.