உள்ளே நான்கைந்து சட்டிப் பானை...
வெளியே ஒரு விசுவாசமான நாய்.
பால் கறக்கும் ஒரு பசுமாடு...
இரண்டு உழவு எருதுகள்..
ஒரு ஏர்...
இரண்டு மண்வெட்டி...
பத்து ஆடுகள்...
ஒரு சேவல்...
ஐந்து கோழி...+30 குஞ்சுகள்...
இரண்டு ஏக்கர் நிலம்.... அதிலொரு கிணறு....
சுற்றிலும் பத்து தென்னை மரங்கள்.
தென்னை மரத்தடியில்
ஒரு முருங்கை மரத்தோடு,
ஒரு கருவேப்பிலை மரமும்...
பக்கத்தில் பத்து வாழைமரம்...!
அடுத்து ஒரு புளியமரம்...!!!
பிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்...!!!
விளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச்செடிகளும்...
மண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய்ச் செடிகளும்...!!!!!
மீதமுள்ள விளை நிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்...தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும்.
இவை மட்டுமே போதும்...
உலகின் ஆகச்சிறந்த தற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்!








