1.நமது மாவட்டத்தில் வருகிற திங்கட்கிழமை(08.06.2020) முதல் ஆசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிவதற்காக பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவ்விவரத்தினை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தெரிவிக்கவும்.
2.அனைத்து ஆசிரியர்களும் தலைமையாசிரியருடன் இணைந்து தேர்வு மையங்களை தயார் செய்ய வேண்டும்.
3.ஆசிரியர்களுக்கான தேர்வு ஆணைகளை வழங்கி,ஆசிரியர்களுக்கான தேர்வு சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
4.ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை புரியும் மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டுடன் முகக்கவசமும் சேர்த்து, சமூக இடைவெளி பள்ளியில் பின்பற்றப்பட்டு முன்னெச்சரிக்கையுடன் வழங்கப்பட வேண்டும்.2.அனைத்து ஆசிரியர்களும் தலைமையாசிரியருடன் இணைந்து தேர்வு மையங்களை தயார் செய்ய வேண்டும்.
3.ஆசிரியர்களுக்கான தேர்வு ஆணைகளை வழங்கி,ஆசிரியர்களுக்கான தேர்வு சார்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
5.திங்கட்கிழமை(08.06.2020) அன்று வருகைபுரிந்த ஆசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள் விவரம்,நுழைவுச் சீட்டுடன் முகக்கவசம் வழங்கப்பட்ட விவரம் மற்றும் பள்ளியில் தேர்வுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள் விவரத்தனை
08.06.2020 மதியம் 2.00 மணிக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி! வாழ்த்துக்கள்!!!
முதன்மைக் கல்வி அலுவலர்கள்
காஞ்சிபுரம்/செங்கல்பட்டு