இன்று தந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற ஆயுத எழுத்து விவாத நிகழ்ச்சியில் பங்கு பெற்ற கல்வியாளர் காயத்திரி என்பவர் தேர்வை திட்டமிட்டபடி நடத்தி முடிக்க வேண்டும் மாணவர்களுக்கு தேர்வை தள்ளிக் கொண்டே சென்றால் மன உளைச்சல் ஏற்படும் 10 ஆம் வகுப்புத் தேர்வு என்பது மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பது என பல கருத்துகளை அடுக்கிக் கொண்டே போனார்.
ஒரு கட்டத்தில் தெலுங்கானாவில் தேர்வை ரத்து செய்துள்ளார்களே என்று நெறியாளர் கேட்டவுடன் தலைப்பிற்கு சம்மந்தமே இல்லாத ஆசிரியர்களின் ஊதியத்தைப் பற்றிப் பேசி தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தினார்.

தெலுங்கானாவோடு ஒப்பிடுகிறீர்களே அங்கே ஆசிரியர்களின் ஊதியத்தில் 50% ஐ பிடித்தம் செய்துள்ளார்களே அது போலச் செய்யலாமா? என்றார் .
கல்வியாளர் அவர்களுக்கு தெரியவில்லை போல இங்குள்ள ஆசிரியர்களுக்கும் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது என்பது.
கல்வியாளர் காயத்திரி அவர்கள் தான் சமீபத்தில் ஓர் கருத்துக்கணிப்பு நடத்தியதாகவும் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக கல்வி கற்பித்தலையே பெரும்பாலான பெற்றோர்கள் ஆதரித்ததாகவும் கூறி தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவே பேசினார்.
ஆனால் சிறிது நேரத்திலேயே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதாமல் இருப்பதால் தான் பெற்றோர்களும் மாணவர்களும் மன உளைச்சலில் இருப்பதாகக் கூறினார்.ஆனால் அது அவர் நடத்திய கணிப்புக்கு முரணாக இருந்தது...
அடுத்து பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை வைத்துத் தான் பதினோறாம் வகுப்பில் குரூப் எடுக்க முடியும் என்றார்.
அப்படி எந்த அரசாணையும் இருப்பதாகத் தெரியவில்லை மாறாக அந்த மதிப்பெண்ணைக் கொண்டு தனியார் பள்ளிகள் தான் பணம் வசூலிப்பதற்கு இலக்கை நிர்ணயித்துள்ளன.
CLICK HERE TO DOWNLOAD

ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளான் என்றால் தனியார் பள்ளிகளில் அம்மாணவன் பதினோறாம் வகுப்பில் தான் விரும்பிய குரூப்பை எடுத்துப் படிக்க முடியாது. ...(அல்லது அதிகப் பணம் கொடுத்தால் கிடைக்கும்.)பத்தாம் வகுப்பில் படிக்காத மாணவன் 11,12 ஆம் வகுப்புகளில் நன்றாகப் படிக்க மாட்டான் என்று முன்னரே முடிவெடுத்துவிடுகின்றன தனியார் பள்ளிகள்.