<
இந்நிலையில், தேர்வுக்கு வரும் மாணவர்களை பரிசோதிக்க தெர்மல் ஸ்கேனர்களை பள்ளிகளே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
திண்டுக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
< 10ம் வகுப்பு பொதுத்தேர்விற்காக அனைத்து வகை உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கான இருக்கை வசதி போதுமானதாக உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், கூடுதலாக தேவைப்படின் அருகாமையில் உள்ள நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் இருந்து உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும்,
அனைத்து பள்ளிகளிலும் வெப்பநிலை பரிசோதனை கருவி (தெர்மல் ஸ்கேனர்) மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்தோ அல்லது பள்ளியின் வேறு வகையான நிதியில் இருந்தோ வாங்கி பள்ளியில் தயார் நிலையில் வைக்குமாறும், சம்பந்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.









