
குரு, சனிப் பெயர்ச்சியைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த கிரகப் பெயர்ச்சியாக கருதப்படுவது ராகு கேது பெயர்ச்சி ஆகும்.
இந்த நிகழ்வு வரும் செப்டம்பர் 2020 மாதத்தில் நடக்க உள்ளது.
இதனால்
எப்படிப்பட்ட பலன்கள் உலக நாடுகளுக்கு கிடைக்கும். எப்படிப்பட்ட இயற்கை
வளங்கள் கிடைக்கும், இயற்கை அழிவுகள் ஏற்படும் என்பதை இங்கு விரிவாக
பார்ப்போம்.
ராகு கேது எப்படி பலன் கொடுப்பார்கள்?
ராகு கேது கிரகங்கள் மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் நிழல் கிரகங்கள் என்பதற்கேற்ப, எந்த ஸ்தானத்தில் இருக்கின்றாரோ அதற்குரிய கிரகத்தின் பலன்களைக் கொடுப்பார்.
எடுத்துக்காட்டாக தற்போது ராகு ரிஷப ராசியில் செல்வதால்,ரிஷப ராசி அதிபதியான சுக்கிரனின் ஆதிபத்தியத்தை நமக்கு தருவார். அதாவது ஒருவரின் ஜாதகத்தில் ரிஷப ராசியில் ராகு இருந்தால், அந்த அதிபதிக்குரிய ஆதிபத்தியத்தை வழங்கக் கூடியவர்.
ராகு கேது நிலையை வைத்து தான் ஒருவரின் ஜாதகத்தில் தோஷங்கள் கணிக்கப்படுகின்றன. அதாவது புத்திர தோஷம், களத்திர தோஷம், தாரா தோஷம் (துணை அமைதலில் சிக்கல்), பிதுர் தோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் ஏற்படுகின்றன.
தோஷங்களைத் தவிர கல்வி ஞானம் பெறுதல், வேலை வாய்ப்பு அமைதல், தொழில், வியாபாரம் முன்னேற்றம், நல்ல முறையில் சரியான நேரத்தில் திருமணம் நடப்பதும், குழந்தை வரம் கிடைத்தல், கர்ம வினை பலன்கள் கிடைத்தல் என பல நல்ல பலன்கள் தரக்கூடியவை நடக்கக் கூடும்.
அதுமட்டுமல்லாமல் ராகு நம்முடைய பெரிய குறிக்கோள், லட்சியத்தைக் குறிப்பதாகவும், கேது பகவான் நம்முடைய சிறிய ஆசைகளையும் குறிப்பதாக இருக்கிறது.
ரிஷப ராசியில் ராகுவும். விருச்சிகத்தில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளதால் ரிஷபம் என்பது நில ராசியையும், விருச்சிகம் ராசியையும் குறிப்பதாகும்.
இதன் காரணத்தால் நிலத்தின் மீது ராகு அதிக தாக்கத்தையும், நீர் சார்ந்த வற்றின் மீது கேது தாங்கள் செலுத்தக் கூடும்.
பேராபத்து ஏற்படும்.. எச்சரிக்கை
அதாவது நிலத்தில் விவசாயம் செழிக்கும், பற்றாக்குறை குறையும், வறட்சி நீங்கும். அதே சமயம் நில நடுக்கம் போன்ற சில மோசமான விஷயங்களும் நடக்க வாய்ப்புள்ளது.
அதே போல் கேது வால் நீர் நிலைகள் நிரம்பும், மழை சிறப்பாக இருக்கும் என்பதால் ஏரி, குளங்கள் நிரம்பி மக்களின் மனக்குறை நீங்கும். அதே சமயம் வெள்ளம் ஏற்படுதல், நீர் நிலைகள் அருகில் சில விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் நீர் போக்குவரத்து செய்வதில் சில நேரங்களில் பாதிப்பு ஏற்படும்.
ராகு கேது பெயர்ச்சி காரணமாக இந்தியா மட்டுமல்லாது உலகளவில் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இதுவரை நீடிக்கும் பொருளாதார மந்த நிலை மாறும்.
பஞ்சாங்கத்தில் எல்லை பிரச்னை ஏற்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதே போல் இந்தியா - சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ராகு கேது பெயர்ச்சி நடந்த பின்னர் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையில் ஏற்றம் இருக்கும். ராணுவம் மட்டுமில்லாமல் பொருளாதார நடவடிக்கையும் முன்னேற்றம் தரும் வகையில் இருக்கும்.
கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் பல புதிய மருந்து கண்டுபிடிப்புகள் மக்களின் மன பயத்தைப் போக்கும் விதமாக இருக்கும். வீடு மனை விற்பனை துறை ஏற்றம் பெறும்.