இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க வரும் இன்ஸ்டாக்ராமின் ‘ரீல்ஸ்’! - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad


https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Tuesday, 7 July 2020

இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க வரும் இன்ஸ்டாக்ராமின் ‘ரீல்ஸ்’!

இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க வரும் இன்ஸ்டாக்ராமின் ‘ரீல்ஸ்’!


இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள சீன செயலியான டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க, இன்ஸ்டாக்ராமின் 'ரீல்ஸ்' தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 சீன விடியோ செயலியான டிக் டாக் சமீபத்தில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட 59 சீன செயலிகளில் ஒன்றாகும். இதற்கு சரியான ஒரு மாற்றினை இந்திய ரசிகர்கள் தற்போது ஆர்வமாகத் தேடி வருகின்றனர்.
 தற்போது பேஸ்புக்கால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாக்ராம் செயலியானது கடந்த வருடம் 'ரீல்ஸ்' என்னும் வசதியை அறிமுகம் செய்தது. டிக்டாக்கில் உள்ளது போன்றே இதிலும் பயனாளர்கள் 15 நொடி விடியோ ஒன்றை, தகுந்த பின்னணி இசை போன்றவற்றுடன் உருவாக்கி பகிரலாம். சோதனை அடிப்படையில் முதலில் பிரேசிலில் அறிமுகமான இந்த வசதியை பின்னர் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இன்ஸ்டாக்ராம் விரிவுபடுத்தியது.

இந்நிலையில் இந்தியாவில் டிக் டாக்கின் இடத்தைப் பிடிக்க, இன்ஸ்டாக்ராமின் 'ரீல்ஸ்' தயாராவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 இதுதொடர்பாக பேஸ்புக் செய்தித்தொடர்பாளர் ஒருவர் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், 'மேம்படுத்தப்பட்ட ரீல்ஸ் வசதியினை இன்னும் சில நாடுகளில் அறிமுகம் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளோம். ரீல்ஸ் பயனாளர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும், தங்களது திறமையினை வெளிப்படுத்த வாய்ப்பு தருவதாகவும் அமையும். எப்போது இது அறிமுகம் செய்யப்படுகிறது மற்றும் எந்த நாடுகளில் எல்லாம் என்பது குறித்து தற்சமயம்  திட்டமிடப்படவில்லை' என்று தெரிவித்தார்.
Source Dinamani

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.