இன்றையத் தலைப்பு நெஞ்சம் மறப்பதில்லை-உள்ளத்தை மகிழ்விக்கும் வரிகள் : - KALVIKURAL | KALVISEITHI |KALVISOLAI | TNPSC |TRB 2019| HEALTH TIPS |TNTET 2019:

Home Top Ad


https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Tuesday, 7 July 2020

இன்றையத் தலைப்பு நெஞ்சம் மறப்பதில்லை-உள்ளத்தை மகிழ்விக்கும் வரிகள் :


இன்றையத் தலைப்பு
 நெஞ்சம் மறப்பதில்லை-உள்ளத்தை மகிழ்விக்கும் வரிகள் :
காலவெளிச் சுழற்சியில்
கட்டியாளும் கணத்தநோய்கள்
கரைந்தொழுகிய அந்தழகிய
காலச்சுவடுகளை நெஞ்சம்மறப்பதில்லை....

கூச்சலிடும் பருவத்தில்
கட்டிப்பிணைத்த அம்மாவிரல்
விட்டுவிலகையில் கண்ணீர்
ததும்பியகணம் நெஞ்சம்மறப்பதில்லை.....

பஞ்சத்தில் வாடிநின்றபோதில்
பஞ்சணையானது அம்மாமடி
பசியின்கோரத்தில் கண்சொருகி
படித்திருந்தநிலை நெஞ்சம்மறப்பதில்லை.....

 

பட்டம்பெற்று வளர்ந்தநிலையில்
பாடுதிருடும் சமூகத்தில்
பாடப்படாத ஊமைக்கவிஞனாகிற
பஞ்சநிலை நெஞ்சம்மறப்பதில்லை....

வாராத தபாலுக்காய்
எழுதப்படாத கடிதத்திற்காய்
தோண்டப்படாத கண்விழியில்
தேங்கிநிற்கிற கண்ணீருக்கு.....

ஆறுதல்மொழி இதயத்திடம்
அத்தனைமுறை போராடிக்கேட்டேன்
இதுதான் உன்வாழ்வு
இதயம்சொல்லை நெஞ்சம்மறப்பதில்லை......

கட்டுப்பட்டு வாழ்வுத்தொடங்கி
துயரம்விட்டு போலிபுன்னகை
தொன்றுத்தொட்டு வாழ்வாகிறேன்
இனியும் நெஞ்சம்மறப்பதில்லை.....
இனியும் நெஞ்சம்மறப்பதில்லை.

கவிபாலாதமிழ்

No comments:

Post a comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...

Post Top Ad

Dear WhatsApp group Admins Please add 9944177387 to receive Kalvikural news regularly.