மேலும், மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை குறித்து ஆராய குழு அமைக்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாகவும், மிக விரைவில் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும், குழு அளிக்கும் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படும் எனவும் கூறினார்.
5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை பொறுத்தவரை தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அதுவே, தமிழக அரசின் நிலைப்பாடு எனவும் திட்டவட்டமாக கூறினார்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையில் தான் வெளியிடப்படும் என்றும், அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக வரும் 10ம் தேதி முதலமைச்சர் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.