12-ஆம்
வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை பஞ்சாப்
மாநிலத்தில், அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தொடங்கிவைத்தார்.
பஞ்சாப்
மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தங்களது கட்சி
ஆட்சிக்கு வந்தால் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்
வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில்,
அக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாண்டுகளாக ஆட்சி செய்துவரும்
நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கும்
திட்டத்தை முதலமைச்சர் நேற்று தொடங்கிவைத்தார். இந்த ஆண்டின் நவம்பர்
மாதத்துக்குள் 1,74,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்று
முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.