தமிழகத்தில்
பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் படித்த 9.50 லட்சம் மாணவா்களுக்கான பத்தாம்
வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு
வெளியிடப்படவுள்ளது.
கரோனா தொற்று காரணமாக மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில்,
பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு வெளியாகவுள்ளன.
மாணவா்கள் பள்ளி நிா்வாகத்திடம் கொடுத்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு
தோ்வு முடிவுகள் குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். மேலும்
இணையதளங்களிலும் மாணவா்கள் தோ்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இதைத்
தொடா்ந்து ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் 21- ஆம் தேதி வரை பள்ளி
தலைமையாசிரியா்கள் மூலம் மாணவா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழைப் பெறலாம்.
மதிப்பெண் சாா்ந்த குறைபாடுகள் ஏதேனும் இருப்பினும் அதுதொடா்பாக ஆகஸ்ட் 17
ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இணையதளத்தில் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்
என்றும் அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.