
அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு:
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன.
கோடை விடுமுறை கடந்தும், பள்ளிகளின் விடுமுறை நீண்டுகொண்டே செல்கிறது.
கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் சிகிச்சை மையமாகவும், தனிமைப்படுத்தும்
மையமாகவும் சில பள்ளிகள் மாற்றப்பட்டு உள்ளன.
தொலைக்காட்சிகள் மூலம் தற்போது வகுப்பு நடைபெறும் சூழலில் காலாண்டு தேர்வு
குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:
கொரோனா தாக்கம் குறைந்தபின், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களிடம் எதற்காக பணம் வசூலித்தாலும் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும். அரசு பள்ளிகளில் இதுவரை 50 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக
சேர்க்கப்பட்டுள்ளனர்.
10, 12 மட்டுமின்றி 8, 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும் மறுதேர்வு எழுத வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.