தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து,
பத்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக பள்ளி கல்வி
துறை அறிவித்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் 10ம் வகுப்பு தேர்ச்சி
விவரங்கள் வெளியிடப்பட்டது. இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில்
அருகே குருங்குடி பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற குறும்புக்கார மாணவன்,
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி அடைந்த மகிழ்ச்சியை போஸ்டர் ஒன்றை வடிவமைத்து
முகநூலில் பதிவேற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில்
பத்தாம் வகுப்பில் என்னை பாஸ் போட்டு வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி
பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி எனவும் என்னை பார்த்து ஏளனமாக சிரித்த எனது
ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன் எனவும்
குறிப்பிட்டுள்ளார். இரு கைகளையும் தூக்கி கும்பிட்டபடி அமைக்கப்பட்ட அந்த
போஸ்டரை சமூகவலை தளங்களில் நெட்டிசன்கள் அதிக அளவில் பகிர்ந்து
வருகின்றனர்.
