நமது சூரியன் ‘பால்வீதி’ எனும் விண்மீன் மண்டலத்தில் ஒரு அங்கம். இந்தப் பால்வீதி சுமார் 2 லட்சம் ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது. (ஒளி ஒரு ஆண்டுக்குப் பயணிக்கக் கூடிய தொலைவுதான் ஒரு ஒளியாண்டு. அதாவது 9,50,000,00,00,000 கி.மீ.
இத்துடன் 2 லட்சத்தைப் பெருக்கினால் பால்வீதியின் விட்டம்). அதில் சற்றே வெளிப் புறத்தில் நமது சூரியன் அமைந்திருக்கிறது. பால்வீதியின் மையத்தில் இருக்கும் மிகப் பெரிய கருந்துளையைத்தான் சூரியன் சுற்றிவருகிறது. ஒரு முழுச் சுற்றுக்கு ஆகும் காலம் சுமார் 22-லிருந்து 25 கோடி ஆண்டுகள்.

அப்படியென்றால் சூரியன் இதுவரை எத்தனை முறை பால்வீதியின் மையத்தைச் சுற்றியிருக்கும்? ஒரு கணக்குப் போட்டுப் பாருங்களேன். பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள். அப்படியென்றால் சூரியனை பூமி 450 கோடி முறை சுற்றிவந்திருக்கிறது என்று அர்த்தம். அதேபோல் சூரியனுக்குக் கணக்கிட்டுப் பார்ப்போமா? சூரியனின் வயது 460 கோடி ஆண்டுகள். பால்வீதியின் மையத்தை ஒருமுறை சுற்றிவர சூரியன் எடுத்துக்கொள்ளும் காலம் சுமார் 22-25 கோடி ஆண்டுகள். ஆக, தன் ஆயுளில் இதுவரை 19 முறைதான் சூரியன் பால்வீதியைச் சுற்றிவந்திருக்கிறது. சூரியனோடு சேர்ந்து பூமியும் கிட்டத்தட்ட 19 முறை பால்வீதியைச் சுற்றிவந்திருக்கிறது என்றும் சொல்லலாம்.
சூரியன் எவ்வளவு வேகத்தில் தன் சூறாவளி ‘சுற்று’லாவை மேற்கொண்டிருக்கிறது என்பது தெரிந்தால் மலைத்துப்போவீர்கள். மணிக்கு 8,28,000 கி.மீ. வேகம்! இந்த வேகத்தில் பூமியின் நிலநடுக்கோடு வழியாக ஒரு வாகனத்தில் (இந்த வேகத்தில் செல்லும் வாகனம் ஏதும் பூமியில் இல்லை என்றாலும்) நீங்கள் புறப்பட்டால் 2 நிமிடங்கள் 54 நொடிகளில் பூமியை ஒரு முறை சுற்றிவிட்டுப் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்வீர்கள்.
-Darwin Science Club Team,
Salem