குவாரன்டைன் பாடல்
(முகம் தெரியாத, எழுதிய நண்பருக்கு நன்றி)
கட்டாயம் இல்லாத தனிமை கேட்டேன்
பதட்டம் இல்லாத எல்லைகள் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் நெகட்டிவ் கேட்டேன்
ரகசியமில்லா அறிக்கை கேட்டேன்
உயிரைக் கொல்லாத வைரஸ் கேட்டேன்
ஆன்ட்டி வைரஸ் தடுப்பூசி கேட்டேன்
திணறல் இல்லாத வைத்தியம் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கை கேட்டேன்
மாஸ்க் இல்லாத முகங்கள் கேட்டேன்
கொரோனா இல்லாத உலகம் கேட்டேன்
பறந்து செல்ல விமானம் கேட்டேன்
ஈ பாஸ் இல்லாத பயணம் கேட்டேன்
செவிலியர் முகத்தில் சிரிப்பைக் கேட்டேன்
காய்ச்சல் எல்லாம் குறையக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
மாத்திரை இல்லாத தூக்கம் கேட்டேன்
மழையில் நனையும் ஆனந்தம் கேட்டேன்
வெள்ளித்திரையில் சினிமா கேட்டேன்
வெளியே செல்ல அனுமதி கேட்டேன்
கிடந்து உருளக் கடற்கரை கேட்டேன்
தோளில் சாயும் நண்பனை கேட்டேன்
துரத்திப் பிடிக்க கிளாஸ்மேட் கேட்டேன்
துக்கம் மறந்த கனவைக் கேட்டேன்
கனவை நிறைக்கும் கற்பனை கேட்டேன்
பூமிக்கெல்லாம் நிம்மதி கேட்டேன்
அத்தனை பேருக்கும் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் மருந்துகள் கேட்டேன்
மழலையர்க்கெல்லாம் விடுதலை கேட்டேன்
உலகுக்கெல்லாம் நிம்மதி கேட்டேன்
ஊருக்கெல்லாம் வேக்சின் கேட்டேன்
மக்களுக்கெல்லாம் வேலைகள் கேட்டேன்
விலைவாசி எல்லாம் குறையக் கேட்டேன்
கைத்தொழில் எல்லாம் உயரக் கேட்டேன்
வளரும் தொழிலாய் விவசாயம் கேட்டேன்
அத்தனை பேருக்கும் ஆரோக்கியம் கேட்டேன்
பூமியில் கூட சொர்க்கம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
மால்களில் சுற்றும் மனநிலை கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
தீம் பார்க்கில் திரியக் கேட்டேன்
பள்ளி வகுப்பில் பயிலக் கேட்டேன்
கல்லூரி நாட்களில் கரையக் கேட்டேன்
காதைத் திருகும் நட்பைக் கேட்டேன்
மூவர் ஏறும் ஸ்கூட்டர் கேட்டேன்
ஹாஸ்டலில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
கேன்டீன் டீயை ருசிக்கக் கேட்டேன்
நீச்சல் குளத்தில் குளிக்கக் கேட்டேன்
கோயில் எல்லாம் திறக்க கேட்டேன்.
விழுந்தால் மீண்டும் எழவே கேட்டேன்
அழுதால் கூட ஆனந்தம் கேட்டேன்
எல்லோரும் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உறவுகள் கேட்டேன்
காமராஜ் போல் ஒரு தலைவன் கேட்டேன்
தலைவன் போல் ஒரு தொண்டன் கேட்டேன்
காந்திஜியின் சிரிப்பைக் கேட்டேன்
வள்ளுவன் சிலைக்கு மாலைகள் கேட்டேன்
மருத்துவர்க்கெல்லாம் விடுமுறை கேட்டேன்
காவலர் அணியும் சீருடை கேட்டேன் நியூசிலாந்தின் நிம்மதி கேட்டேன்
மதுரை வீதியில் வலம்வரக் கேட்டேன்
எல்லையைக் காக்கும் அலுவல் கேட்டேன்
சேர்ந்து நடக்கத் தோள்கள் கேட்டேன்
வீரனைப் போன்ற திறமையை கேட்டேன்
சிப்பாய் போன்ற பெருமையைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இறப்பைத் தாங்கும் சக்தியைக் கேட்டேன்
இழப்பைத் தாங்கும் இதயம் கேட்டேன்
வைரஸ் தாங்கும் வலிமை கேட்டேன்
வேகம் குறையாத நெட்வொர்க் கேட்டேன்
கேட்டது கிடைக்கும் வாய்ப்புகள் கேட்டேன்
துள்ளித்திரியும் காலங்கள் கேட்டேன்
விழிகளால் பேசும் தோழிகள் கேட்டேன்
மங்கையர் செய்யும் புன்னகை கேட்டேன்
கன்னம் சிவக்கும் மாயங்கள் கேட்டேன்
சீக்கிரம் மறையும் புன்னகை கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
கட்டியணைக்கும் நட்புகள் கேட்டேன்
மைதானம் சென்று விளையாடக் கேட்டேன்
தாவும் வயதில் நண்பர்கள் கேட்டேன்
ஐந்து வயதில் பள்ளியும் கேட்டேன்
பதினெட்டு வயதில் கல்லூரி கேட்டேன்
ஆன்லைன் வேண்டாம், வகுப்புகள் கேட்டேன்
செயலிகள் வேண்டாம்,புத்தகம் கேட்டேன்
சுதந்திரமாக வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச சிரிப்புகள் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
கொரோனா கொரோனா வேண்டாமென்று
விடுதலை கேட்கிறேன்..... எம்பெருமானே...இறைவா அருள் தர வேண்டுகிறேன்....