''தமிழகத்தில்,
பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள், தற்போது இல்லை,'' என, பள்ளிக்
கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு
மாவட்டம், கோபி அருகே, நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் வரும், 17ம்
தேதி, அரசு, நிதியுதவி, தனியார் என அனைத்து வகை பள்ளிகளிலும், மாணவர்
சேர்க்கை துவங்குகிறது. ஒரு பள்ளியில் இருந்து, மாற்றுப் பள்ளி யில், பிற
வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கும், 17ம் தேதி முதல் சேர்க்கை நடக்கிறது.
பத்தாம்
வகுப்பு முடித்து, பிளஸ் 1 செல்லும் மாணவர்களுக்கான சேர்க்கை, வரும், 24ம்
தேதி நடக்கிறது. தற்போதைய சூழலில், மாணவர் சேர்க்கை மட்டுமே
அறிவிக்கப்பட்டுஉள்ளது.தமிழகத்தில் கொரோனா சூழலில், எப்போது பள்ளிகள்
திறப்பது என்பது குறித்து, முடிவு செய்ய முடியவில்லை.
ஏனெனில்,
கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையவில்லை. எனவே, பள்ளிகள்
திறப்பதற்கான சாத்தியக்கூறுகள், தற்போது இல்லை. வரும் ஜனவரியில், மாணவ -
மாணவியருக்கு, 'ஷூ, ஷாக்ஸ்' வழங்கப்படும். 'நீட்' தேர்வுக்காக, 3,019
மாணவர்களுக்கு, இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளை
மிஞ்சும் அளவுக்கு, அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.