*தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார் தோனி
*ஏற்கெனவே, டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவிப்பு
*2011 ல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் பெற காரணமானவர்
இந்திய
அணியின் முன்னாள் கேப்டன் தோனி 39. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இவர்,
2004ல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
இதுவரை
90 டெஸ்ட் (4,876 ரன்), 350 ஒருநாள் (10,773 ரன்), 98 சர்வதேச
‘டுவென்டி–20’ (1,617 ரன்) போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்தியாவுக்கு
மூன்று வித உலக கோப்பை (2007ல் ‘டுவென்டி–20’, 2011ல் 50 ஓவர், 2013ல்
சாம்பியன்ஸ் டிராபி) வென்று தந்துள்ளார்.
தனது
‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு ஓய்வை
அறிவித்திருந்தார். இதில், ‘‘ஆதரவு தந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி’’
என, தெரிவித்திருந்தார்.
*இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
மகேந்திர
சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை
அடுத்து சுரேஷ் ரெய்னாவும் ஓய்வை அறிவித்தார். “உங்களோடு விளையாடிய நாட்கள்
அருமையானது. முழு திருப்தியோடு நானும் உங்கள் வழியில் பயணிக்க உள்ளேன்.
இந்தியாவுக்காக விளையாடியது பெருமைக்குரியது. நன்றி இந்தியா. ஜெய்ஹிந்த்”
என்று கூறியுள்ளார்.
இந்த
அடுத்தடுத்த அறிவிப்புகளால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர். ரெய்னாவுக்கு 33 வயது மட்டுமே ஆகிறது என்பது
குறிப்பிடத்தக்கது