வாட்ஸ் அப் மூலம் வங்கி சேவைகள் இனி வீட்டிற்கே வரும் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது.
இந்த
சேவையை வழங்க இருப்பது எஸ்பிஐ வங்கி. அதாவது பணம் எடுக்க ஏடிஎம் மையத்தை
தேடிப்போகும் காலம் போய், உங்க வீட்டு வாசலுக்கே ஏடிஎம் எந்திரம் இருக்கும்
வாகனம் வர இருக்கிறது. அதன்படி "உங்க வீட்டு வாசலில் ஏடிம்" என்ற சேவையை
ஸ்டேப் பாங்க் ஆஃப் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது. நீங்கள் வங்கியின்
வாட்ஸ் அப் எண்ணிற்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பினால் போதும். அடுத்த சில
நிமிடங்களில் நடமாடும் ஏடிஎம் வாகனம் உங்க வீட்டுக்கு வந்துவிடும். இந்த
சேவை தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
விரைவில் இந்த சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது.