
வீடியோவைப்
பார்த்த பின் அது தொடர்பான வீடியோக்களை தேடுவதில் பலர் சிரமப்படுகின்றனர்.
இதற்கு ஒரு குறிப்பிட்ட யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வதன் மூலம், அந்த
சேனலின் வீடியோக்களையும், அது தொடர்பான வீடியோக்களையும் பார்க்க
முடியும்.யூடியூப் என்பது எண்ணற்ற வீடியோக்களை கொண்ட வீடியோ தளம்.
கொரோனா
ஊரடங்கால், நான்கு மாதத்திற்கும் மேலாக வீட்டில் இருக்கும் நம்மில் பலர்,
யூடியூப் வீடியோக்களை நாடி வருகிறோம். சமையல் செய்வது எப்படி என்பது
முதற்கொண்டு பல்வேறு வீடியோக்கள், குறிப்புகள், நாம் வாங்க விரும்புகம்
பொருட்களின் விமர்சனங்கள் உள்ளிட்ட பலவற்றையும் யூடியூப்பில் தேடி தெரிந்து
கொள்கிறோம்.
ஒரு வீடியோவை பார்த்த பின், அந்த
பயன்பாட்டை மூடிய பின், அதுதொடர்பான வீடியோக்களை மீண்டும் தேட சிரமம்
உண்டாகும். நாம் தொடர்ந்து பார்க்க விரும்பும் வீடியோக்களை சிரமம் இன்றி
தேட, குறிப்பிட்ட வீடியோ சேனல்களை சப்ஸ்கிரைப் செய்தால் அது எளிதாகும்.
இப்போது, யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்வது எப்படி என காண்போம்...
#
நீங்கள் ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் அல்லது பெர்சனல் கம்யூட்டர் என எதை
பயன்படுத்துகிறீர்களோ, அதிலிருந்து நீங்கள் சப்ஸ்கிரைப் செய்ய விரும்பும்
சேனலின் வீடியோக்களில் எதையேனும் ஒன்றை கிளிக் செய்வும்.
#
ஸ்மார்ட்போனில் சேனிலின் பெயருக்கு அடுத்தபடியாக சப்ஸ்கிரைப் ஆப்சன்
சிவப்பு நிறத்தில் இருக்கும். இதுவே பெர்சனல் கம்யூட்டரில், லைக்ஸ்,
டிஸ்லைக்ஸ் மற்றும் பட்டன் ஆப்சனுக்கு கீழே இருக்கும்.
#
நீங்கள் விரும்பும் சேனலில், சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்தால், அந்த
சேனலின் வீடியோக்களை தொடர்ந்து நீங்கள் எளிதாக பார்க்க முடியும்.நீங்கள்
முதலில் யூடியூப்பில் லாக்ஆன் செய்திருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்ளுங்கள்..
நீங்கள் சேனலை சப்ஸ்கிரைப்
செய்தபின், அந்த சேனலின் புதிய வீடியோக்களின் அறிவிப்புகளை பெற
விரும்பினால், பெல் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
நாம்
சப்ஸ்கிரைப் செய்திருக்கும் சேனல்களின் எண்ணிக்கை, ஸ்மார்ட்போனில்
யூடியூப் ஆப்பின் முகப்பு பக்கத்துக்கு கீழே கடைசியிலும், வெப் பக்கமெனில்,
இடப்பக்கத்திலும் காணலாம்,