பள்ளிக்கு வராமல், வீட்டிலிருந்தே ஆசிரியர்கள் பாடம் நடத்த, தனியார்
பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடம்
நடத்தப்படுகிறது. பெரும்பாலான பள்ளிகள், ஆன்லைன் வழி கற்பித்தலில்
களமிறங்கி விட்டன.
வகுப்பறை போன்ற சூழலை, இம்முறை
கொடுக்காவிட்டாலும், கற்பித்தல் உபகரணங்கள், வீடியோ திரையிடல் உள்ளிட்ட
நடைமுறைகளை பின்பற்றி, பாடத்திட்டம் புரிய வைக்கப்படுகிறது.
கரும்பலகையில்
பாடம் நடத்துவதோடு, பள்ளியில் உள்ள ஆய்வகங்கள், கற்பித்தல் உபகரணங்களை
பயன்படுத்தி பாடம் நடத்த, ஆசிரியர்களை பள்ளிக்கு வருமாறு சில பள்ளிகள்
நிர்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர்களோ,
பள்ளிக்கு வர அச்சப்படுகின்றனர்.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர் உஷாவிடம் கேட்டபோது, ''ஆசிரியர்களின் வீடுகளில், கற்பிக்க போதிய
வசதிகள் இல்லாததால், பள்ளிக்கு வரவழைப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
சில
தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் விசாரித்த போதும், தாமாக பள்ளிக்கு வருவதாக
தான் கூறினர். இப்போதைய சூழலில் வீட்டிலிருந்தே ஆன்லைன் வகுப்புகள், கையாள
அறிவுறுத்துமாறு, பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படும்,'' என்றார்.