வீடுகளில்
மக்களிடம் சுமார் 25,000 டன் முதல் 30,000 டன் வரையிலான தங்கம் முடங்கி
கிடக்கிறது. இவற்றை வெளியே கொண்டு வர மத்திய அரசு எடுத்த முயற்சிகள் பலன்
தரவில்லை. மாற்று முதலீட்டு திட்டங்களும் மக்களை ஏற்கவில்லை.
சென்னை:
கணக்கில் காட்டாமல் வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி விதிக்க
மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தானாக முன்வந்து
விவரங்களை ஒப்படைப்போர் வரி மற்றும் அபராதம் மட்டும் செலுத்தினால் சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.