'சத்துணவு பணியாளர்களின், ஒரு நாள் சம்பள பிடித்தத்தை ரத்து செய்ய
வேண்டும்' என, அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு
வலியுறுத்தியுள்ளது.
சத்துணவு பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை, 7ல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய, சமூக நல கமிஷனர் உத்தரவிட்டார்.

இதற்கு, அரசு அனைத்து துறை சங்கங்களின்
ஒருங்கிணைப்பு குழு கண்டனம் தெரிவித்து உள்ளது.இதன் ஒருங்கிணைப்பாளர்கள்
தமிழ்ச்செல்வி, ஜனார்த்தனன், மதுரையில் நேற்று கூறியதாவது:அரசு ஊழியர்கள்,
ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, ஜனநாயக பூர்வமான இயக்க
நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜனநாயக
முறையில் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேசி, பிரச்னைகளுக்கு தீர்வு
காணாமல், சட்ட விரோதமாக சம்பளம் பிடித்தம் செய்ய, கமிஷனர்
உத்தரவிட்டுள்ளார்.அந்த உத்தரவை ரத்து செய்து, கோரிக்கைகளை நிறைவேற்ற,
முதல்வர் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.